FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 04, 2019, 05:31:54 PM

Title: evil matrum ice mazhikku vaazhthu..
Post by: Unique Heart on June 04, 2019, 05:31:54 PM
தோழனே! தமையனே!
நெஞ்சினித்த நண்பனே!
வாழ்க்கையின் பாகமாய்
சேர்ந்துவிட்ட அன்பனே!

நட்பெனும் ஊரிலே
நட்டுவைத்த பூவென,
புன்னகை செய்து நீ
பூமிதன்னில் வாழ்கவே!

இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!

உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!

உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா !

உறவே உன்னை என்றும் நினைக்க மறவா
உறவாளன் நான். - MNA....