FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on June 04, 2019, 10:49:50 AM

Title: *காதல்*
Post by: சிற்பி on June 04, 2019, 10:49:50 AM
காதல்
கண்ணீர் பாலைவனம் அல்ல
அது கடவுளின் தரிசனம்

காதல்
கவிஞர்களின் கல்லரை அல்ல
அது கவிதைகளின் கருவரை

காதல்
பல இதயங்களின் உறவு அல்ல
அது பல உறவுகளின் இதயம்

கல்மனதையும்
கரையச்செய்யும் காதல்
அது கடவுளை
கண்டெடுக்கும் தேடல்

இதயங்களும்
உணர்வுகளும்
இனைகின்ற நெரம்
தவழ்கின்ற காற்றில்
தாலாட்டும் காதல்

காதல் காவியங்களை
பார்த்து வியந்தேன்
அன்று ...காதல் பல
காவியங்களை தந்திருக்கிறது

மணிமுடி
ஆன்ட மன்னவன் ஒருவன்
மனைவிக்காக மாளிகை அமைத்தான்
(தாஜ்மஹால்)

கற்பின் கரையில்
கலங்கிய பெண்மை
கணவனுக்காக மதுரையை எரித்தாள்
(கன்னகி)

காதல் தந்தது
உலகம்
காதல் தந்தது
வாழ்க்கை
காதல் தந்தது
ஞானம்

......சிற்பி.

(https://i.postimg.cc/7bHffRjd/images-11.jpg) (https://postimg.cc/7bHffRjd)

(https://i.postimg.cc/7bHffRjd/images-11.jpg) (https://postimg.cc/7bHffRjd)
Title: Re: *காதல்*
Post by: Unique Heart on June 15, 2019, 11:38:31 PM
அருமையான கவிதை,  வாழ்த்துக்கள்  நண்பா.