FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on June 03, 2019, 09:11:58 PM

Title: எனக்கு ஒரு வரம் வேண்டும்
Post by: சிற்பி on June 03, 2019, 09:11:58 PM
இறைவா...
இரவெல்லாம்
இனியவளின்
நினைவுகளை
யோசித்தேன்

அவள் இதயத்தில்
எனக்காக
ஓர் இடத்தை
யாசித்தேன்

நாளெல்லாம்
அவளோடு
இருக்கின்ற வரம்
வேண்டாம்

நான் எப்போதும்
அவள் நினைவோடு
அழுகின்ற
வரம் வேண்டும்

சிரித்தாலும்
அவளோடு
சிரிக்கின்ற
வரம் வேண்டும்

அழுதாலும்
அவள் மடிசாய்ந்து
அழுகின்ற
வரம் வேண்டும்

இறைவா....

அவளோடு
வாழ்கின்ற
வரம் எனக்கு
தர வேண்டாம்

அவள் காதலனாகவே
நான் சாகின்ற
வரம் வேண்டும்


   சிற்பி...
(https://i.postimg.cc/2qF2skxT/images-11.jpg) (https://postimg.cc/2qF2skxT)