FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on May 26, 2019, 09:40:25 AM
-
வலி பொறுக்காத எந்தக் கல்லும்
சிலையாக முடியாது....!
நானும் வலியைப் பொறுத்துக் கொண்டு
இருக்கிறேன் ஒரு நாள்
சிலையாக...!
புரிதல்களும் புரியாமையும்
புரிந்து கொள்வதற்குச்
சில காலங்கள் செல்லும்.
அதுவரை ...
ரண வலித் தேடல்கள்
தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
பிரிவின் வலி இன்னும் ஆறவில்லை...
கண்களின் ஈரம் இன்னும் காயவில்லை..
வாரத்தைகள் வந்து....
உதட்டோரம் அடைப்பட்டுக் கொண்டிருக்கிறது...
திரும்பும் திசையெங்கும்
வெறுமை படர்ந்து காணப்படுகிறது...
அத்தனையும் அன்பால் வந்த வினை...!
எது வந்தாலும் ஏற்றுக்கொள்...!!!
எது போனாலும் விட்டு விடு...!!!
ஏனெனில் எதுவுமே நிலையில்லை....!!!
-
Rishu nice kavithai :-* its true rishu babe edhuvume nirathiram ile indha ulagathila namaku namaa than thunai nu ninaichutu poite irukka vendiyathuthan ... :'(
-
உனக்குள் எத்தனை எத்தனை அழகான.
தேடல்கள்
அழகே நான் வியந்து போகிறேன்
நீ புதுமைப் பெண்
உன்னை போல் இல்லை இல்லை
இந்த பூமியில் .....யாரும்....
-
Rishika. உறவே. கவலைகள் வேண்டாம்.
இவ்வுலகில் மாறாத ஒன்று இருப்பின்.
அது மாற்றம் மட்டுமே.
இந்நிலை மாறும், இதுவும் கடந்து போகும்.....