FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on May 15, 2019, 11:47:41 PM
-
கரையேறா மீன்கள்
நேர்த்தியாக பின்னப்பட்ட வலையின்
இழைகளினிடையே
வழுவியோடும் வாழ்விற்கு
நன்றியுரைக்க சொல்கிறது
நீரின் தாய் மடி
கரையேறத் துடிக்கும் மீன்களுக்கு
தெரிவதில்லை
கரையும் சாசுவதமில்லை என்பது.