FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 03, 2019, 09:04:27 PM

Title: காதலும் நட்பும்
Post by: thamilan on May 03, 2019, 09:04:27 PM
காதல்
அது யாருக்கு யார் மேல்
எப்படி வரும் எப்போது வரும்
இது தெரியாத புரியாத புதிர்

உனக்கு தெரியும் என் மனதில்
நீ நிறைந்திருப்பது
எனக்குத் தெரியும் உன் மனதில்
நான் இருப்பது

நீறு பூத்த நெருப்பாக
நம் மனதில் காதல்
யார் அதை கிளறி விடுவது
அது தான் விடைதெரியாத கேள்வி

சொல்லத்தான் நினைக்கிறேன்
காலை சுற்றியிருக்கும் பூவிலங்கு
சொல்ல விடாமல் தடுக்கிறது
என்மனதில் அலையடிக்கும் காதல்
கரைதடுக்கிறது திரும்பிபோ என

நட்புக்கும் காதலுக்கும் இடையில்
சிறு மதில்
மதில் மேல் பூனையாக நான்
நட்பை களங்கப்படுத்தவும் விருப்பமில்லை
காதலை தடுக்கவும் மனமில்லை

முன்பே உன்னை சந்திருந்திருக்கக் கூடாதா
என்வாழ்வில்
எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறேன்
ஏன் உன்னை மட்டும் சந்திக்கவில்லை
இறைவனின் விளையாட்டு இது தானோ

பிரபஞ்சத்தை சூழ்ந்திருக்கும் வளி போலே
ஏன் மனமெங்கும் சூழ்ந்திருக்கிறாய்
கருவானில் முழுநிலவென
என் மனவானில் உன்முகம்
என் சிந்தனையை சூறையாடியவளே
என்சிந்தை குளிர ஒரு புன்னகை புரிவாயா                             
உன் அன்பு
காதலால் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை
உன் நட்பால்
கிடைக்கிறதே அதுவே  போதும் எனக்கு   
Title: Re: காதலும் நட்பும்
Post by: NiYa on May 10, 2019, 10:42:05 PM
"முன்பே உன்னை சந்திருந்திருக்கக் கூடாதா
என்வாழ்வில்
எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறேன்
ஏன் உன்னை மட்டும் சந்திக்கவில்லை
இறைவனின் விளையாட்டு இது தானோ"

எல்லாம் நன்மைக்கே நண்பா
உங்கள் காலை சுற்றி இருக்கும்
பூவிலங்கை விலகாமல் இருப்பதால்
அதன் பெறுமதி மிக உயர்வு போலும் 
தோன்றுகிறது


கவி அருமை