FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on April 21, 2019, 03:35:55 AM
-
நின்னடி படிகையில்
முழுமைகொண்டு
பெருமிதமேறி
இலகுவாகும் உயிர்
பற்றிக்கொள்ளும்
ஒரு உவகையன்றி
வேறேதும் வேண்டி நிற்பதில்லை
என் சரணடைதல்
கூடாகும் உன்னில்
கூடடையும் கொடுப்பினையை
மறத்து போதல்
மரணித்துப்போதலின
குறைந்ததுமன்றே
உயிருணரும் சுமை குறைத்திடவேண்டியேனும்
நின்னையே சரணடையட்டும்
இவ்வுயிர்...