FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on April 13, 2019, 02:00:47 PM

Title: சில உள
Post by: இளஞ்செழியன் on April 13, 2019, 02:00:47 PM


பின்னிரவில் கிடைக்கப்
பெற்றத் தெளிவானப்
புத்தியில் நற்சிந்தனைகளை
மேற்கொண்டதுண்டா..??

அதன் பின்னான விடியலுக்கானக் காத்திருத்தலில் தெளிவானதொரு
முகத்தின் பிம்பத்தை நினைவு
படுத்தியதுண்டா..??

பிரியமான ஓர் புகைப்படத்தை
எடுத்து வைத்துக் கொண்ட
பக்கம் பக்கமாகக் கவிதைகள்
கிறுக்கியதுண்டா..??

எப்போதும் முன்னே எழுந்து
அனுப்பியிருக்கும் நற்காலைக்
குறுஞ்செய்திகளை அனுப்பிய
வேளையிலேயேப் படித்ததுண்டா..??

அதிகாலையில் எழுந்துத் தொழுது
நேசக்கரத்திற்காகவும், தன்
நேசத்திற்கு உரியவர்களுக்காகவும்
பிரார்த்தித்ததுண்டா..??

மெல்லத் தடம் பதித்து கருநீலக்
கடல் மந்தாரமாவதைக் கண்டு
கொண்டே ரசித்துக் கடந்து
சென்றதுண்டா..??

பொங்கித் ததும்பி வரும்
பொன்னிறக் கதிரவனைக் காணக்
கண்ணிரண்டுப் போதாமல்
கண்டு களித்ததுண்டா..??

அப்படியேக் கடற்கரையில் காற்று
வாங்கிக் கொண்டேக் கொண்ட
அரிதான அனுபவத்தைக்
கவிதையாய்க் கிறுக்கியதுண்டா..?

வாழ்தல் ஓர் கலை மானிடா........