FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on April 06, 2019, 12:21:39 PM

Title: மனமென்னும் சாத்தான்
Post by: இளஞ்செழியன் on April 06, 2019, 12:21:39 PM


ஒன்றை பிடித்துப்
போய் காதலித்து,
அதற்கான மொத்த
விதிமுறைகளையும்
கடைபிடித்து, அதன்
அனைத்து
கட்டளைகளுக்கும்
அடிபணிந்து, அதன்
ஆத்ம திருப்தி
ஒன்றின் காரணம்
கொண்டே சின்னஞ்சிறு
ஆசையெல்லாம்
துறந்து, இருந்து
வந்திருந்த சிற்றின்பங்கள்
கூட இம்மியளவும்
இல்லாமல் செய்து
இறுதியில் அதுவும்
இல்லாமல் போனால்
கடைசிகட்ட ஆட்சியிழந்த
தனித்தீவைப் போல்
மனம் தத்தளிக்காமல்
என்ன செய்யும்..