FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on April 02, 2019, 09:50:32 PM

Title: நேசிப்போம்..!!
Post by: இளஞ்செழியன் on April 02, 2019, 09:50:32 PM

அன்றைய நாட்களில்
அவள் என்னைப் போதும் போதும் என்னுமளவுக்குக் கொண்டாடித் தீர்த்திருந்தாள்

எதிலுமே மயக்கமுறாத என்னை அவளின் ஒவ்வொன்றையும் ரசிக்கச் செய்து மந்தமாக்கி வைத்திருந்தாள்

இதுவும்..!!
இதற்கு முந்தையதும்..!!
இதற்கு அடுத்த படியாய் அவள் செய்யப் போகும் அனைத்துமே எனக்கானது மட்டுமே என்று என்னை முட்டாள்த் தனமாக நம்ப வைத்திருந்தாள்..

ஏன் அவளுக்கு என்னைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமேயில்லையா.?
என்று ஏன் என்னால் சந்தேகிக்க முடியவில்லை.
இவ்வாறு இப்போது என்னை நானே கேட்டுக் கொள்வதில் அணுவளவும் பயனில்லை எனத் தெரிந்தும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன்.

தெளிவானதாக ஒன்றைத்
தெளிவுபடுத்திக் கொண்டேன்.
பிடித்தமானவர்களுக்கு பிடித்தவை அனைத்தையும் நமக்கும் பிடிக்கச் செய்து விடுவதால் அவர்கள் செய்யும் அனைத்துமே நமக்குதான் என்று நம்பிக் கிடக்கும் ஓர் நிலை உருவாகிறது.

அவர்களுடையதை அவர்களைக் கவரும் ஒரேக் காரணம் கொண்டு நாம் ஏன் நம் மீது திணித்துக் கொள்ள வேண்டும்..??
நமக்குப் பிடித்த எதாவது ஒன்றை அவர்கள் நேசிக்கிறார்களா..??
இல்லையென்றால் நாம் மட்டும் ஏன்.?

பகிர்தலும், பெற்றுக் கொள்தலும்
சேர்ந்ததே இந்த அன்பு.
கொடுத்துக் கொண்டேயிருந்து
இறுதியில் நாம் அதே அன்பிற்குப் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது அல்லவா..!!

நேசிப்போம்..!!
நேசித்தலை
அவர்கள் நிறுத்தவோ,
அவமதிக்கவோ ஆயத்தமாகும்
நாள் வரையிலான நேசங்களை மட்டும்
அளவீடு செய்து நேசிப்போம்...
Title: Re: நேசிப்போம்..!!
Post by: RishiKa on April 03, 2019, 10:42:45 AM

பகிர்தலும், பெற்றுக் கொள்தலும்
சேர்ந்ததே இந்த அன்பு.
கொடுத்துக் கொண்டேயிருந்து
இறுதியில் நாம் அதே அன்பிற்குப் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது அல்லவா.

உண்மையான ஆழமான கருத்து செழியன் !..நேசிப்பதற்கும் அளவீடு உள்ளது என இப்போதுதான் உணர்கிறேன் !நன்றி ! பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

Title: Re: நேசிப்போம்..!!
Post by: Guest 2k on April 04, 2019, 12:25:09 PM
நேசித்தலுக்கு ஏது அளவீடு?
Title: Re: நேசிப்போம்..!!
Post by: இளஞ்செழியன் on April 04, 2019, 01:49:35 PM
நேசித்தலுக்கு அளவீடுகள் இவ்வையகத்தில் இல்லை... ஆனால் அன்பை கூட ஆயுதமாக்கி மற்றவர்களை கட்டுபடுத்தும் உலகம் இது .. ஆதலால் அளவொடு நேசியுங்கள்..
Title: Re: நேசிப்போம்..!!
Post by: Guest 2k on April 04, 2019, 02:03:31 PM
hmm, Agreed