FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on March 26, 2019, 07:56:03 PM

Title: முறிந்த சிறகுகள் !
Post by: RishiKa on March 26, 2019, 07:56:03 PM


நீண்டதாக உள்ள மௌனங்களில் ..
சொல்லமுடியாத தோற்ற வெளி !
பூமியில் இருந்து ...
பயணப்பட்ட புகை கூட்டங்களின் ..
ஒளித்து வைக்கப்பட்ட மழை துளிகள் !
பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட
நினைவு பெட்டகங்கள் ...
இன்று புறங்களில் ...
நிழலாய் அசையும் வேப்பமரம் !
பிரிக்கவே முடியாத இருட்டுக்குள் ..
உயிர்த்து கொண்டு இருக்கின்றன ...
உணர்வுகள் ...
பனித்துளிகளாய்!
எரிமலைகளாய் !

மனசருகே  பாயும் சிந்தனையின்
வீச்சுகளை எட்ட முடியாமல்
கைகள் துவளும் ...
எழுதுகோல் முறியும் ...
தண்ணீர் தேடும் பறவை
தன் சிறகை முறிப்பது போல ..
இடைவெளியை கடக்கும் யத்தனத்தில் ..
காலம் உயிர் பறிக்கும்
காகிதம் இழந்த  கவிதை  மட்டுமே !
Title: Re: முறிந்த சிறகுகள் !
Post by: Jabber on March 28, 2019, 02:09:40 PM
வணக்கம் ரிஷிகா,
                 
                           கிட்டத்தட்ட உங்கள் கவிதைகள் அனைத்தும் வாசித்து விட்டேன்..(ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைகள் நீங்கலாக)..நேர்த்தியாக எழுதுகிறீர்கள்..பிரிவு,நினைவுகள்,தேடல்கள் சார்ந்த கவிதைகளை அதிகமாக எழுதுவதாக உணர்கிறேன்..உங்கள் பதிவுகளில் மற்ற உணர்வுகளை உள்ளடக்கியும் எழுத நேரமிருந்தால் முயற்சி செய்யுங்கள்..கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன் ..

                    நன்றி..
Title: Re: முறிந்த சிறகுகள் !
Post by: RishiKa on March 28, 2019, 02:17:37 PM

தங்கள் கருத்துக்கு  மிக்க நன்றி ஜாபர் அவர்களே !..