FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Evil on March 18, 2019, 09:37:23 AM

Title: என்னவளின் அழைப்பு
Post by: Evil on March 18, 2019, 09:37:23 AM
என்னவளின் அழைப்பு

என்றும் என்றென்றும் உன் அன்பு வேணும் என்று கூறியவள் 


என் மனதைக் கொடுத்து அவள் மனதைப் பரிமாறி கொண்டவள்


நிமிடத்திற்கு ஒருமுறை நலமா என்று அழைபேசியில் கேட்டவள்

அன்போடு ஆறுதல் கூறி அரவணைப்பில் அன்னை யானவள்

கண்ணில் கருணை மனம் கொண்ட கடவுளின் குழந்தையானவள் 

அவளின் அழைப்பிற்காக தானோ நான் பிறவி எடுத்தேனோ


அவளின் அன்பைப் பெற்றிடத்தானோ நான் பிறந்து வந்தேனோ

அவளின் கரம் பிடிக்கத்தானோ நான் கடிதம் எழுதினேனோ

அவளின் முகம் காண தானோ முந்நூறு ஜென்மம்  எடுத்தேனோ

அவளின் அழகை ரசிக தானோ நான் ரசிகனானேனோ

அவளின் பார்வையில் படதானோ நான் பறவையானேனோ


(https://i.pinimg.com/originals/43/ea/c0/43eac0b2c721d94b091b7da081f6bea8.jpg)
Title: Re: என்னவளின் அழைப்பு
Post by: joker on March 18, 2019, 11:59:53 AM
evil ,

காதலில் தான் விழுந்தாயோ 
கவிதை தான் எழுதினாயோ
இதை எழுத தான் ftc  வந்தாயோ
படித்தவரை இன்புற வைத்தாயோ

 :D


தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
Title: Re: என்னவளின் அழைப்பு
Post by: Evil on March 18, 2019, 10:54:48 PM
thanks machioooo  :-*