FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on March 15, 2019, 02:30:52 PM
-
தினம் தினம் கட்டில் இடும் கைப்பாவை
ஆனால் என்ன பாவமோ
தொட்டில் இட முடியாத
துரதிஷ்டசாலி
அழுகி போகும் தேகத்திற்கு ஒப்பனை செய்து
அரங்கேற்றும் கைப்பாவை ..
காவியம் சொல்லும்
அன்பு கூட இங்கு தனத்திற்கு விலை போகும்
ஆசை பார்வைகளும் இங்கு உண்டு
இதழ் ஓர வெட்கங்களும் இங்கு உண்டு
இதயம் என்ற வார்த்தைக்கு
இங்கோ மிதியடிதான் மிச்சம் ...
என்ன பாவம் செய்தார்கள் இவர்கள் ...
உயிரை வளர்க்க தேகத்தை விற்றிடுவாள்
தோல் சுருக்கும்வரை தேனாய் இனித்திடுவாள்
தேகம் பார்க்க
ஒழுக்கம் என்னும் போர்வையில்
ஒளிந்துகொண்டிருக்கும்
சில குள்ளநரி கூட்டத்தின் பசி தீர்ப்பாள்
விலை மதிப்பில்லாத இவள்
இதயத்தை பார்க்கத்தான் ஆள் இல்லை
பல மனித மிருகங்கள் வேட்டையாட
தானாய் வலையில் சிக்கும்
புள்ளிமான்...
தன்னை தானே எரித்து கொண்டு
மெழுகுவர்த்தியாய் உருகி
பல பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சமாய் இருப்பாள்
ஆனால் இவள் வாழ்க்கையோ
என்றும் இருட்டறையிலே முடிகிறது
பல பெண்கள் மானத்துடன்
வாழ இவள் செய்யும் தியாகத்திற்கு
இந்த சமுதாயம் இவளுக்கு சுட்டிய பெயர்
விபச்சாரி
பெண்களாக பிறந்தது இவர்களின் தவறா?
இந்த பெண்குலத்திற்கு என்று வரும் விடியல்
பெண்களை போதை பொருளாக
மாற்றியது இந்த சமுதாயம்
...
பெண்களே
இது அதிகாரத்தை கையில் கொண்டு
அடக்கும் சமுகம்
நீயே வீறுகொண்டு எழு
இல்லை என்றால் மண்ணோடு புதைந்திடுவாய்....
விலைமதிப்பில்லா விலைமகள் ...
#periyar 8)
#arulmozhi_speech 8)
-
அட்டகாசமான கவிதை சாக்கி ப்ரண்ட். எப்பவுமே நாம் எட்டி பார்த்திடாத விளம்பு நிலைல சில மனிதர்கள் எப்பவும் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அவங்களை பத்தி கவலைப்படலனாலும் பரவாயில்லை. அவங்களை மனுசங்களாவாச்சும் மதிக்கனும். இந்த கவிதை முகத்தில் அறைய கூடிய உண்மையை கொண்டது. பெண் ஏன் அடிமையானாள்ங்கிற பெரியார் புத்தகம் தான் நினைவுக்கு வருது :)
-
chikuuu tanzzzz sollamata ....ithu ellam namba ippo pesurom...aana periyar ithu ellam aapovae pesitaru
evalo periya theerkatharisiya iruthurukaru .....periyar eppavum vera level tha...mudicha intha video parunga..
http://www.youtube.com/watch?v=f2m48GdB7AU&feature=youtu.be (http://www.youtube.com/watch?v=f2m48GdB7AU&feature=youtu.be)
-
sokaroo super a iruku kavithai semaa pappi romba meaning ulla kavithai neenga eluthina kavithaile enku indha kavithai romba pudichu iruku :) oruthar pain a ippadi azhagaa kavithaiyala solli irukuringa pappi super super pappi :)
பல பெண்கள் மானத்துடன்
வாழ இவள் செய்யும் தியாகத்திற்கு
இந்த சமுதாயம் இவளுக்கு சுட்டிய பெயர்
விபச்சாரி :'( :'(
-
paapa apadiya joooepruuuu nokkum tanzzz kedaiyathu :D