FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 14, 2019, 10:35:44 PM
-
உன் சமாளிப்புத் திறனின் வெளிப்பாட்டில்
சின்னச் சின்னத் திருத்தங்களில்
நியாயங்களைப் பட்டியலிட்டுப் படையலிடாதே..!!
நிலைக்காது நின் தவறு.
ஒப்புக் கொள்ளாமையால்
நாளையே நீ நன்மை செய்தாலும்
நாள்போக்கில் அவை மறைந்து
நீ செய்த சிறு தீங்கே நிலைத்து விடக் கூடும்..!!