FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 13, 2019, 02:11:56 AM

Title: நிலைகொள் நினைவே
Post by: இளஞ்செழியன் on March 13, 2019, 02:11:56 AM
 நிலையில்லாமல்
நித்தமும் உடைந்து வீழும்
நீயாலான என்னையுன்
நீக்கமற நிறைந்திருக்கும்
நினைவின் குளத்தில்தான்
நீந்தவிட்டிருக்கிறேன்
நீர்க்குமிழிகளுக்குள்ளேயே சுழன்று
நிம்மதியின் நிறைகூடி
நிரந்தரமாக
நிலைக்குவரும்போது எடுத்து
நிதானமாக பொருத்திக் கொண்டு
நிற்கத் தொடங்கி விடுவேன்
Title: Re: நிலைகொள் நினைவே
Post by: NiYa on March 14, 2019, 02:23:10 PM
அழகு