FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on March 12, 2019, 12:49:15 AM
-
தீயின் நாக்குகள் திரியுமிடத்தில்
சிறு பூவின் இதழ் சிதறியது
யார் குற்றம்
புன்னகைக்கும் பூவின்
இதழ் கருகும் வாசனையில்
எழுந்தடங்கும் தீயின் ஜூவாலைகளுக்கு தான் எத்தனை பேரானந்தம்.
பூவின் இதழுக்கு உரைப்பது
எங்ஙனம்
சுடுவது தீயின் இயல்பென்று