FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 11, 2019, 02:23:41 PM
-
நான் சடலமாகி என்னுயிர்
இவ்வுடலின் உள்ளேயே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
என் முதுகுத் தண்டில்
துவங்கி கணுக்கால்
வரைப் பயணிக்கிறேன்
இடது கைப் நடுவிரல் நகம்
துவங்கி வலது நடுவிரல்
நகம் வரைப் பயணிக்கிறேன்
நெற்றிப் பொட்டிலிருந்து
நொட்டாங்கால் பெருவிரல்
வரைப் பயணிக்கிறேன்
உச்சந்தலையில் இருந்து
உள்ளங்கால் வரையிலும்
பயணிக்கிறேன்
இருதயத்தில் துவங்கி
இடுப்பெலும்புச் சதை
வரைப் பயணிக்கிறேன்
எதையுமே விட்டு வைக்காமல்
முழுக் கூட்டையும் அலசிக்
கொண்டிருக்கிறேன்
இரத்த ஈரத்தில் நனைந்தாலும்
தப்பித்து விடலாம் என்றுத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஈரல் புழு முதல் சிறு
துளைக் கூட விடாமல்
துலாவிக் கொண்டிருக்கிறேன்
இந்த இருட்டில் எந்தப் பாதையையும்
தராமல் நீ நிறைந்து அனைத்தையும்
மறைத்துக் கொண்டிருக்கிறாய்
நீ இருக்கும் ஒரேக் காரணத்தால்
இக்கூட்டை விட்டுக் கூட உயிரைப்
பிரிக்கக் கூட முடியவில்லை
நிம்மதியாய் விலகி சாகவும்
கூட விடாத நீ ஏன் இன்னும்
இடைவெளியை அதிகரித்துத்
தொலைவாகிப் போனாய்..??