FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on March 08, 2019, 07:41:17 AM

Title: இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Post by: KaBaLi on March 08, 2019, 07:41:17 AM
 
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள்.
 ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்”

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு.
ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை?
உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

இது உனக்கான வாழ்க்கை...
உன் கண்களே ஆயுதம்
மண்ணில் பிறந்த முத்தே!
மனித குலத்தின் அழியா சொத்தே!

பெண்ணாய் பிறந்த நீயும்
பெருமை சேர்த்தாய் பூமிக்கு!
நித்திரை துறந்து பிள்ளையை காத்து
நிகராய் ஆனாய் சாமிக்கு!

எத்துணையோ செலவு செய்தலும்
ஏதோ ஒரு வழியில்
சேர்த்து வைபவள் பெண் !
தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

புருஷன் குடித்தாலும்
பொறுமை காத்து
குடும்பத்தை வழிநடத்துபவள் பெண்

உணவே இல்லை என்றாலும்
உடுத்த உடை போதும் என்று
தன் கற்பை பாதுகாத்து
தனக்கே காவலனாக இருப்பவள் பெண்

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்

அடுக்கையில் ஆரம்பித்து
அணுகுலை வரையிலும்
கணவனின் ஆரம்பித்து
கணினி வரையிலும் - என
இனி வரும் நாட்களில் கொடி கட்டி
நாட்டின் புனித பறவையான புறாவைபோல்
சிறகு விதித்து சுற்றி   வளம் வர வாழ்த்துக்கள் அன்னையே !! 

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

  என்னை ஆணாக அடையாளப்படுத்திய அனைத்து மகளிருக்கும்...
 

 
<3 இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் <3
Title: Re: இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Post by: Guest 2k on March 08, 2019, 08:27:19 AM
குட்ட, நன்றி நன்றி.
 இருக்கட்டும், பிரியாணி வாங்கி தரலாம்ல

(https://i.postimg.cc/sXBkGCsK/download-20190305-102400.jpg) (https://postimages.org/)
Title: Re: இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Post by: regime on March 08, 2019, 09:38:06 AM
(https://i.pinimg.com/originals/41/98/b2/4198b260b2691f08ebf8157e90f92c55.jpg)