FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 07, 2019, 07:20:28 PM

Title: முயன்றால் முடியாதது ஏதும் இல்லை
Post by: thamilan on March 07, 2019, 07:20:28 PM
சிறு பறவையொன்று
தன ஒற்றை சிறகினில்
இந்த மொத்த  உலகையும்
சுருட்டிக்கொள்ள முயற்சிக்கிறது

பெண் குழந்தையொன்று
மின்னல் கீற்றை கொண்டு
மெழுகுவர்த்தியை கொழுத்த முயற்சிக்கிறது

வாலிபன் ஒருவன்
விமானத்தை விட வேகமாக
ஓடவேண்டும் என முயற்சிக்கிறான்

பேருந்தில் வயோதிபர் ஒருவர்
சீறி வரும் சிறுநீரை
வீடு சென்றடையும் வரை
அடக்க முயற்சிக்கிறார்

இவை அனைத்துமே
முடியாது என்றாலும் 
முயற்சி அழகானது, அற்புதமானது
ஒரு நாள் வெல்லக் கூடியது

கவிதையும் இது போன்ற
ஒரு முயற்சி தான்
வாருங்கள் முயற்சி செய்வோம்   
Title: Re: முயன்றால் முடியாதது ஏதும் இல்லை
Post by: Guest 2k on March 07, 2019, 08:51:28 PM
காசா பணமா, முயற்சி தானே, செஞ்சிடுவோம். அருமையான கவிதை தமிழ்  :D