FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Evil on March 06, 2019, 11:50:21 AM
-
விண்ணில் இருந்து இறங்கிய தேவதையே என்னை விண்ணாள எடுத்து செல்ல வந்தாயோ !!!
என் உடலை விட்டு என் உயிரை மட்டும் பிரித்து உன்னுடன் கரம் கோர்த்து கனவுலகிற்கு அழைத்து சென்றாயோ !!!
அன்பால் அரவணைக்க அன்னை என வந்து அரவணைத்து சென்றாயோ !!!
மண் ஆள வந்தவனை விண்ணாள வைக்க விண்ணுலகம் அழைத்து செல்ல வந்தாயோ !!!
கற்பனை என்னும் நிழல் உலகை விட்டு காதல் என்னும் காவியம் படைக்க கவர்ந்து சென்றாயோ !!!
என் இதயத்தில் இடம் பிடித்தவளே உன் இதயம் என்னிடம் கொடுத்து என் இதயம் பறித்து சென்றாயோ !!!
பூவுலகின் புதையல் என் உயிர் என்று எண்ணி உன்னுடன் அழைத்து சென்றாயோ !!!
-
Nice Kavithai Evil Peii
-
testing