FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 30, 2012, 12:45:34 PM

Title: உன் அறிமுகத்திற்கு முன்பும் - பின்பும்
Post by: aasaiajiith on March 30, 2012, 12:45:34 PM

உன்  அறிமுகத்திற்கு  முன்புகூட 
நான்  கவிதை  எழுதித்தான்  வந்தேன்

அப்போது  ( இன்  அறிமுகத்திற்கு முன்பு  )

கற்பனை  குதிரைகள்  கண் திறப்பதற்கு
கன காலம்  காத்திருக்கவேண்டியிருக்கும்   

தட்டி  தடுமாறி , வார்த்தைகள்  இடம்  மாறி
தப்பி தவறி , தவறாய்த்தான் வரி   பதிப்பேன்

இப்போதெல்லாம்  ( உன் அறிமுகத்திற்கு பின்பு )

M.A.M ராமசாமி  யின்  குதிரைகளையே  ஓட்டத்தில்

சவால்  விடும்  வகையில்  வெளுத்துகட்டுகின்றன 
கட்டுகடங்கா  என்  கற்பனை குதிரைகள்

அப்போதும் ( உன் அறிமுகத்திற்கு முன்பு )

வர்ணனைக்கும்  ,ஒப்பீட்டிர்க்கும் 
வறண்ட  வார்த்தைகள் வசமாகும் 
தடைபட்டு  தடைபட்டு கிடைக்கும் 
தமிழக  மின்சாரம்  போல

இப்போது  ( உன்  அறிமுகத்திற்கு பின்பு )

தங்கு  தடை  ஏதும்  கண்டே  கண்டிராத
உன் அன்பையும்  பாசத்தையும்  போல  !
Title: Re: உன் அறிமுகத்திற்கு முன்பும் - பின்பும்
Post by: RemO on March 31, 2012, 01:09:01 AM
Quote
அப்போது  ( இன்  அறிமுகத்திற்கு முன்பு  )

machi ipadi kavithaila vilakangal koduka venumanu maru pariseelanai panunga
ithelam ilama iruntha kavithai inum nalarukum nu nenaikuren
Title: Re: உன் அறிமுகத்திற்கு முன்பும் - பின்பும்
Post by: aasaiajiith on March 31, 2012, 03:05:52 AM
Nalla Karuththu ! Nandrigall Nooru !

Varigall, Kavidhaiyaaakapada vendumenum
Ennaththai kaattilum Naan Kooora Virumbum En Ennamum,EnnaOttaMum,Karutthum ,Karpanaiyum , Elidhaaga Miga miga Elidhaaga Padipporukum,Thevaiyaanavargalukkum Puriya vendum, Enbadharkku  Kattamidalum
AdikkOdidalum Avasiyapaduvadhaal mattumey Aduhu. ThAvira , Ellorukkum Un pol Thelivu Irukum endru Sollivida mudiyaadhey Remo !