FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 23, 2019, 03:17:29 AM

Title: அதீதம் நீ
Post by: Guest on February 23, 2019, 03:17:29 AM
இருப்பென்பது சுமையாகி
உயிர் மையம்கொள்ளும்
ஒரு புள்ளியில் சுயமுணர்ந்து
பேரண்டத்தில் அடிநிலம்கூட உரிமையில்லா
ஆதிமனிதனாகிறேன்.

நிசப்தங்களில் ஆர்ப்பரித்து
ஆரவாரங்களில் பேரமைதி தேடும்
விந்தைமனம்
வாட்டும் இல்லாமைகள் குறித்துணர்த்த போதுமானதாகிவிடுகிறது.

உன்னைத் தாண்டிய
இழப்பொன்றில்லை என்பது
ஆறுதலாகி இரணமும் ஆகிறது.

எல்லாக் கோணங்களிலும் எல்லைக்கோடுகளுக்கு
அருகாமையிலேயே நிலைக்கொள்ளும் எல்லையில்லா
கொள்ளளவோடான அதீதம் நீ.

வழிப்போக்கன்
கடந்து சென்ற மலர்வனத்தின்
சுகந்தமாய் நாசித்துவாரங்களை
ஆசிர்வதித்தே இரு..