FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on February 22, 2019, 11:41:23 PM
-
மனதினில் சேகரித்த மெல்லிசை
விதையாய் விழுந்து மரமாய் முளைத்த நட்புகள்
என் புன்னகையில் பூ பூக்க செய்தவர்கள்
பூவிதழில் திராவகம் தெளித்தும் சென்றனர்
இமைகளில் ஒரு சலனம் சட்டென்று விழி மூட ..
இதயத்தில் இறங்கிய ரணங்கள்
வலிகள் என் வாழ்வின் எச்சங்களோ ?
எங்கு தொடங்கியது ?
ஏன் தொடங்கப்பட்டது ?
தவறுகளை யார் தான் தவிர்த்திருக்கிறார்கள்
என் தவறுகள் மாத்திரம் பாவங்களாக
ஏன் பரிமாறப்படுகிறது ?
பிரிவுகளையே சுவாசிக்கும் எனது இதயம்...
பிணைப்புகளுக்கு ஏங்கி தவிக்கிறது...
தவித்து தவித்து காலாவதியாகி போகுமோ?
எனது உணர்வுகளும் ...
-
எல்லாருக்குக்குள்ளும் தோன்றும் கேள்விகள் வழிகள் தொகுத்து ஒரு கவிதை
தொடர்ந்து எழுதுங்கள்
-
நன்றி ஜோக்கர் அவர்களே :)