FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 20, 2019, 02:07:30 PM

Title: ஓரு நாள் கிறுக்கல்கள் -1
Post by: Guest on February 20, 2019, 02:07:30 PM
என் கைக்கடிகாரத்தில்
சிக்கிப்பறக்கும்
ஒற்றைக் கூந்தலில்
விலக மனமின்றி தொக்கிநிற்க்கிறது
உன் நினைவுகள்

பிரமிப்போடு
உனை எதிர்க்கொள்ளும்
ஒற்றை நொடிகளுக்காகவே
தவிப்புகளை தேக்கி வைத்து காத்திருந்திருக்கும்
நம் காதல்..


மிச்சமிருக்கும்
என் கணங்களை
சுவாரஸ்யமாக்குவதற்க்கு
வேண்டியாயினும்
உன்னை நேசிக்க அனுமதி
என்னை..


கேள்விகளுக்கான
தேவைகள் எழாத அணைப்பொன்றில் தூரம் தவிர்க்க
வெகுநேரமாய் காத்திருக்க்கிறது
ஒரு ஒற்றை முத்தம்.💕

காத்திருப்பதாய்
நீ அனுப்பும்
ஒற்றைவரி குறுஞ்செய்தியில் நிரம்பியிருக்கிறது
என் நாள் முழுவதிற்குமான
களைப்பு நீக்கும்
விஷமுறிவு..💞


தவித்துறங்கும் இரவுகளில்
உனக்கான தனிமை என
இல்லா நியாயங்கள் பேசி தவிர்த்திருத்தலில்
தவித்திருத்தலாகி நீள்கிறது காதல்..

எதிர்பாராத ஒரு
முத்தத்தைத் தாண்டிய
ஒரு கவிதையையா
விரல்கள் வடித்துவிடப்போகிறது???..

நீயெல்லாம் கவிதையெழுத மட்டும் தான் இலாயக்கு
என முணுமுணுத்துப் போகும்  உன் சத்தம்
எனக்கு கேட்காமலில்லை...💞💞💞