FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on February 09, 2019, 11:23:30 AM

Title: நீளும் பாதை
Post by: JasHaa on February 09, 2019, 11:23:30 AM
காட்டாற்று  வெள்ளமாய்  வாரி சுருட்டி சென்றது -காதல்
மூச்சு முட்டி போகையில்  ஸ்வாசமாய் அவன்...
ஆழிப்பேரலையாய்  சுற்றி சுழன்றடித்தது- காதல்
சிக்கி சின்னாபின்னமாகாமல் சுவாசமாய் அவன்

நேற்று வரை நினைத்து இருந்தேன்-காதல்
தீண்டத்தகாதது  என... நீ தீண்டிய நொடியில் 
உயிர்த்தெழுந்தேன் உயிர்ப்பாய் அவன்

சிறகுடனே பறப்பேனென சஞ்சரித்த எனது-காதல்
வானம் நரகமாய்  மாறிப்போனதாய்  அவன்
நரகமான  நொடி சொர்க்கமாவதும்,
சொர்கமான நொடி நரகமாவதும் 
உன் அருகாமையில்...

ஆகாயம்  தொடும் உணர்வை  தந்த-காதல்   
அவனே பாதாளத்திழும் தள்ளிச் சென்றான்...
நரகமாய் நீளும்  பாதை 
இருந்தும்  பயணிக்கிறேன் 
காதலை  சுவாசமாய்  சுவாசித்து...
Title: Re: நீளும் பாதை
Post by: Guest 2k on February 12, 2019, 09:55:08 PM
அண்ணி என்னா ஒரே லவ் பீலீங்க்ஸா இருக்கு. ஒருவேளை நமக்கு தெரியாம எதுனா லவ்வு கிவ்வு செட்டாகிடுச்சோ 🤔
Title: Re: நீளும் பாதை
Post by: JasHaa on February 13, 2019, 06:20:11 PM
chiku:D apadiye matitalum (wb) ni vere
nama always single than :D:D