FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 07, 2019, 09:27:04 PM
-
நான் எனும் திமிர்க்கொள்ளா
நான் ஆகிடும் மனம் வேண்டி
நின்னுள் தஞ்சமடைகிறேன்
மிதக்கும் கனத்தில் எனை மாற்றி
காற்றென சலசலக்க வைத்து
பின் வெள்ளமாய் ததும்பி
கரைபுரள செய்கிறாய்.
எடையுணரும் நொடிகள் மீண்டும்
உன் அருகாமை வேண்டி நிற்கும்
மெய்களும் மெய்நிகர் கனவுகளுமென
கூடவே இருந்து பின் கூடுமாகிறாய்.
‘நான்’ எனும் என்னை தொலைக்க
உன்னை தேடிக்கூடியதில்
எனை உணர்கிறேன்.
கனமில்லாது கர்வமில்லாது
வெறுமனே நானாகுகையில்
உறுத்தல்களில்லா நானாகிறேன்..
-
Niceuuu :D மிக அருமையான வரிகள்
-
@sam danks danks
-
இரண்டு நானாதல் கவிதை படிச்சிட்டேனோ. ம்ம்ம் Nice நண்பா.