FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 06, 2019, 02:18:44 PM
-
தேவதைகள் கண்ணீர் சிந்தும் நாளொன்றில்
செயலற்றுப் போய்விடு..
மௌனங்கள் கொண்டு இறுகப்பூட்டிய
உன் உணர்வுப்பேழையை
யாரும் கவனிக்கா நொடியொன்றின்
அந்தியத்தில் மறைத்து வைத்தப்பின்
யாதுமானவன் தவிர்த்து
யாருமறிந்திடா
எதுவுமாகிவிட எத்தணிக்காத
நிலையொன்றில் நிலைப்பெற்றிடு
யார் நீ எனவோ
என்னவாகுகிறாய் எனவோ
யாரேனும் வினவுகையில்
என்னை நான் எப்படி விவரிக்க என
யார்க்கும் புரியாத,
உன் நிலை உணர்த்தா
ஓர் பதிலுரைத்து நகர்ந்திடு
அன்புச்சிறை என்பது
சாபமா வரமா எனும்
தர்க்கம் தவிர்த்திடும் சாபமொன்றை
உனக்காய் வேண்டிக்கொள்கிறேன்..
மூலங்களை ஆராய முனைந்திடாத
நேசத்தின் விரல்கள் கண்ணீர்த்துளிகளை
துடைத்தே தொடரட்டும்.
-
ஏதோ புரியற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு... ஏதோ சொல்ல வர மாதிரியும் இருக்கு சொல்ல வராத மாதிரியும் இருக்கு... என்னவா இருக்கும் :o :o
-
அன்புச்சிறை என்பது வரமா சாபமா எனும் தர்க்கம் தவிர்த்திடும் சாபம். ம்ம்ம், remarkable. மேல்நோக்கிய பார்வையில் அத்தர்க்கத்தை தவிர்ப்பது வரம் தானே என தோன்றும். ஒரு கணம் குழம்பி நம்மை மீண்டும் தெளியச் செய்யும் வரிகள் இவை. அன்புச்சிறை எனும் தர்க்கம் அன்புடையோர் இடையே நிகழாமல் இருப்பின் அது சாபம் தானே. புரிதல் சரியா என்று எனக்கு தெரியல நண்பா. But
எனக்கு இப்படி தோணிச்சு. ரொம்பவே அழகான கவிதை