காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .
உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம். உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 08.02.2019 வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....
என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உங்கள் இதயங்களை வந்தடையும் ....
(https://i.postimg.cc/dkychbd3/kisspng-thanksgiving-gratitude-happiness-turkey-greeting-c-love.png) (https://postimg.cc/dkychbd3)
காதல்
அன்பின் முன்னுரை காதல்
காயங்களின் முடிவுரை காதல்
தூக்கத்தை தொலைப்பது காதல்
ஏக்கத்தை வளர்ப்பதும் காதல்
சுகமாய் வருவது காதல்
சுமையாய் போவதும் காதல்
கனவுகளை தருவது காதல்
நிஜத்தை கலைப்பதும் காதல்
சுகங்களை காலடியில் வைப்பது காதல்
ஒட்டுமொத்த வலியையும் உணர வைப்பதும் காதல்
அறிவாளியாய் உணரவைப்பது காதல்
அறியா வலியை உணர்த்துவதும் காதல்
யோசிக்க வைப்பது காதல்
யோசனைகளை பொய்யாக போகச்செய்வதும் காதல்
உறவாய் உணரவைப்பது காதல்
தனிமையில் தவிக்க செய்வதும் காதல்
காதல்
நீ என்பது மாறி
நீயே காதலாகி போவாய்
காதல் கானல் நீராய் போகாமல்
நிஜமாவதும்
நிழலாய் போவதும்
காதலர்களாகிய நாம்
எடுக்கும் முயற்சியிலே
சாத்தியம்...
இனியவளே
என் இதயம் என்னும்
பூஞ்சோலையில்
அன்பு என்னும் தேனை மட்டும்
ருசிக்க வந்த
வண்ணத்துப்பூச்சி நீ ...
இனியவளே
முதலில்
நட்பாய் கை கொடுத்து
பின்
காதலாய் கரம் பிடித்தவளே
என் சோகங்களை கரைத்தவளே
என் கண்ணீரையும்
தித்திக்க செய்தவள் நீ...
இனியவளே
என் முகம் கண்டு
என் மனம் அறிவாய்
புயலாய் வரும்
என் கோபத்தையும்
சிறு புன்னகையில்
வென்றுடுபவள் நீ....
இனியவளே
உன் நேசத்தை
அளவுகோல் வைத்து
அளக்க தான் முடியுமா ?
நான் மட்டுமே
உன் உலகம் என்று
என்ன சுற்றி சுற்றி வரும்
உன் நேசத்திற்கு ஈடாய் எதை தருவது ?
உன் நேசத்துக்கு ஈடான
என் நேசத்தை தவிர...
இனியவளே
உன் சின்னச்சிறு கனவுகள் நான் அறிவேன்
உன் சின்னச்சிறு ஆசைகளை நான் அறிவேன்
உன் சின்னச்சிறு பயங்களை நான் அறிவேன்
உன் சின்னச்சிறு ரணங்களை நான் அறிவேன்
உன் கனவுகளை
நிறைவேற்ற துணை நிற்பேன்
ரணங்களில்
உன் கண்களை
கடந்துவரும் கண்ணீரை
என் விரல் நுனியால்
அணை கட்டிடுவேன்...
இனியவளே
முகம் கண்டு வந்த நேசம்
முடிந்து போகும்
அகம் கண்டு வந்த நேசம்
காலம் தாண்டி
வாழ்ந்திடுமே ...
கண்கள் காணாமல் அகத்தை கண்டு
உணர்ச்சிகளை காணாமல் உணர்வை புரிந்துகொண்டு
நாம் கடந்து வந்த நம் நேசம்
உன் கண்களை கண்டு வீழ்ந்து போகுமோ?
உணர்ச்சிகளை கண்டு உணர்வு இழந்திடுவோமோ ?
இல்லை இல்லை
நேரில் கண்டால் கூட
வரம்பை மீறாது நம் நேசம்...
அந்த நாள் வெகு விரைவில் வர
நாம் இருவரும்
காத்திருப்போம்......
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்....
(https://i.postimg.cc/dhjXD80b/kisspng-logo-brand-pink-m-font-cute-tag-5b46b8034c8569-108192581.png) (https://postimg.cc/dhjXD80b)