FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 29, 2019, 03:41:15 PM

Title: பிரிவு !
Post by: joker on January 29, 2019, 03:41:15 PM
(https://i.postimg.cc/qNXPFJpV/f2.png) (https://postimg.cc/qNXPFJpV)

முதன் முதல் பார்த்தேன்
முதல் காதல் பூத்தது

இரு விழி பார்த்ததால்
இரு உள்ளம் சேர்ந்தது

மூன்றாம் நபர் வருகைக்காக
முதலிரவு அரங்கேறியது

நாளெல்லாம் உன் நினைவு போதும் என்று
நான்கு நாள் நினைத்திருப்பேன்

ஐந்தாம் நாள் ஏனோ உன்னை பற்றிய
ஐயம் தொற்றி கொண்டது

ஆறு படை முருகனே தப்பவில்லை
ஆறு நாள் ஆன நீயும் நானும் எம்மாத்திரம்

ஏழுலகை ஆளும் ஈசனே

ஏழாம் பொருத்தம் என் வாழ்க்கை ஆனதேனோ ?

எட்டு திக்கும் உன்னை போல் ஒருத்தி

எட்டாது எனக்கு என்றானே ?

ஓவியம் தான் என்றாலும்
உன் பிரிவு தாங்கலையே...

****ஜோக்கர் ****