FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on January 26, 2019, 03:24:08 PM

Title: நீர் குமிழி பயணம் !
Post by: RishiKa on January 26, 2019, 03:24:08 PM

காற்றும் நீரும் மோதிய ..
ஒரு குளிர்  கணத்தில்...
வெற்றிடத்தின் வெளியில் ...
பிறந்து எழும்புகிறேன் !

காற்றின் துணையோடு ...
உலகினில் திரிகிறேன் !
கண்டு ரசித்தனர் சிலர் !
பிடித்து உடைக்க முயன்றனர் பலர்!

தப்பித்து உயரே   பறந்தேன் !
தனியே காட்டில் நடக்கிறேன் !
ஒற்றை சிறகினிலே  உலவுகிறேன்!
கடல் அலைகளில் அலைகிறேன்!

வான வெளியில் சுழல்கிறேன் !
மலை உச்சியில் மிதக்கிறேன் !
நெருப்பு ஆற்றில் நீந்துகிறேன் !
மரங்களின் நிழல்களில் துயில்கிறேன் !
நிலவினை எட்ட முயல்கிறேன்!

நீர்குமிழியின் பயணம் தான் ..
கனவாய் நீள்கிறது !
கலைந்து போன நினைவுகளில் ...
தாமதமாய் உணர்ந்து மீள்கிறேன் !
எப்போதோ நான் கரைந்து...
காணாமல் போய் விட்டேன் என்று !
Title: Re: நீர் குமிழி பயணம் !
Post by: Guest 2k on January 26, 2019, 06:59:34 PM
Nice one Rishu Babiee 💜