FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 24, 2019, 12:18:15 PM
-
அப்பாவுக்காக
அயிரைமீன்
தம்பிக்காக
தம் பிரியாணி
அக்கைக்காக
அவரைக்கூட்டு
அண்ணனுக்காக
முருங்கை
எனக்காகவும் சில
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்று
உனக்கு
எது பிடிக்கும் என்றேன்
அம்மாவிடம்?
உங்களை என்று
சொன்னாள்
அடுக்களைக்குள்ளிருந்து
[highlight-text]****யுகபாரதி****[/highlight-text][/size][/color]
-
அம்மா...
வார்த்தைகள் இல்லாமல் பேசிக்கொண்டு
கண்கள் துறக்காமல் ரசித்துக்கொண்டு
காற்றே இல்லாமல் சுவாசித்துக்கொண்டு
கவலைகள் இல்லாமல் உன் கருவறையில் வாழும் எனக்கு
உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றியது.....
உன் வயிட்றில் வீணாய் சுற்றுவதை நிறுத்தி விட்டு
நிமிர்ந்து அமர்ந்து கவியரசியின்
வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
அடிமுடி தேடினாலும்..
அகராதியை புரட்டினாலும்..
முழுமையான அர்த்தம் அறிய முடியாத..
உயிர் சித்திரமான என் தாயே..
உன்னை பற்றி எனக்கு கவிதை வந்ததை விட
கவலை தான் அதிகம் வந்தது..
இன்னும் 1 மாத காலத்தில் நான் உன்முகம்
பார்பேன் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும்.
உன்னுள் இருந்து பூமிக்கு தனியாய் வந்துவிடுவேன்
என்ற கவலை...
தாயே நான் கேட்டு ரசித்த முதல் இசை உன்
இதயத்தின் ஓசை...
இன்னும் 1 மாத காலத்திற்கு பின்னால் அதை
என்னால் கேட்க முடியாதல்லவா தாயே....
அதனால் ஒரு சிறு கவலை....
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர் மெய் எழுத்தில் மா எடுத்து
அழகிய தமிழில் ஒன்றாய் கோர்த்த
அம்மா
[highlight-text]
*****ராஜலட்சுமி ****[/highlight-text][/size][/size][/color]
-
அம்மா என்ற வார்த்தையில்
அகிலம் அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி,
கடவுளின் கருணை நீயடி,
பெண்மையின் சிறப்பு நீயடி,
புரியாத புதுமை நீயடி,
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
பண்பின் பல்கலை கழகம் நீயடி,
பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,
பிள்ளைகளின் ஆசான் நீயடி,
குடும்பத்தின் குணவதி நீயடி,
தியாகத்தின் திருபீடம் நீயடி,
திருவருள் தரும் தெய்வம் நீயடி,
அதுவே என் அம்மா.
தாயன்பு
கைதியை கட்டி போடும் அன்பை
கண்டதும் உன்னிடம்தான்
கண்ணே என்ற போது - என்
உள்ளத்திலே அமுதம் சுரக்கின்றது.
கருவறையில் இருக்கும் போதே
இதயவறை தந்தாய் - இனியவளே
இன்றும் இறைவனிடம் எனக்காய்
பிரார்த்திக்க மறக்கவில்லை நீ
தாயே இதுவரை - உன்
உள்ளம் குளிர எதுவும் செய்யவில்லை
இன்றும் என்னை எறிந்து விடவில்லை,
இதயத்தில் இருந்து
[highlight-text]மிராசியா[/highlight-text]
[/size][/color]