FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on January 19, 2019, 11:38:17 PM
-
காணும் காட்சி விளிம்புகளில் ...
காணாத முகம் தேடும் போதிலே..
மனதை மறைத்து வைத்து.....
நாணும் மொழி என்ன மொழியோ ?
நீள் பரப்பின் ஆகாயத்தில்...
விரியும் ஒளி ஜாலங்களில் ..
மனதை ஊஞ்சலாட விட்ட....
கற்பனைக்கு என்ன மொழியோ ?
பனி காற்றின் வாசத்தில்..
படரும் நினைவுகளில்...
ஒரு கொடியாய் பின்னி ஊர்ந்திடும் ....
ஊர்வலம் என்ன மொழியோ?
ஆடலும் பாடலுமான உலகில் ..
தனிமையை இரவல் வாங்கி
மௌனத்தின் ராகங்களை ...
இசைப்பது என்ன மொழியோ ?
ஆரம்பத்தின் முடிவு ....
தேடலின் ஆரம்பம் ....
நிழல் தேடி இளைப்பாறும்..
நிஜங்கள் மொழி என்ன மொழியோ ?
-
அருமையான கவிதை ரிஷூ பேபி 💕