FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on January 18, 2019, 10:31:49 PM

Title: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 18, 2019, 10:31:49 PM
அக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள் :

அறிமுகம்

அக்கரம் என அழைக்கப்படும் அக்கரகாரம் மூலிகைச்செடி, கருமண் நிலங்களில் நன்கு வளரும், இளம் பச்சை நிறத்தில் பெரிய இலைகளைக் கொண்ட இந்தச் செடிகளின் மலர்கள், இள மஞ்சள் வண்ணத்தில் சிவப்பு நிறம் கலந்து காணப்படும். அதிக கிளை வேர்களைக் கொண்டு விளங்கும் அக்கர காரத்தின் வேர்களே, மிக்க மருத்துவப் பலன்கள் கொண்டவை.

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் அக்கரகாரம், வட மாநில மலைப் பிரதேசங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. மருத்துவ நன்மை மிக்க அக்கரகாரத்தின் வேர்கள், உடலில் ஏற்படும் வாத வியாதிகளைப் போக்குவதிலும், நரம்புத் தளர்ச்சி பாதிப்பால் ஏற்படும் காக்கா வலிப்பு போன்ற வியாதிகளைத் தீர்த்து, மூளையின் இயக்க ஆற்றலை மேம்படுத்தும் சக்தியும் மிக்கது.

உமிழ் நீரைப் பெருக்கி, தொண்டையில் ஏற்படும் உள் நாக்கு பாதிப்பை சரியாக்கும். அக்கரகார வேரை வெறுமனே நாவில் இட்டு சுவைக்க, உதடு, நாக்கில், விறுவிறுப்பும், சிறு எரிச்சலும் உண்டாக்கும் தன்மை படைத்தது. அக்கரகாரம் வேரில் இருந்து எடுக்கப்படும் "பைரித்திரின் ஆயில்" பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்ட மருந்துகளில், சேர்க்கப்படுகிறது.

மருத்துவ நன்மைகள் :

1.சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். இவர்கள் எல்லாம், சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் இட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வர, தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, தாகமெடுப்பது போன்ற பாதிப்புகள் விலகும்.

2.சிறிய அளவு அக்கரகாரத்தை சற்றே அரைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைத்து, கால் லிட்டர் அளவில் தண்ணீர் வற்றியவுடன், எடுத்து ஆற வைத்து, தினமும், அதில் சிறிதளவு வாயில் இட்டு அதக்கிக் கொண்டு, சற்று நேரம் வைத்திருந்து கொப்புளித்து உமிழவும். இதுபோன்று, தினமும் இரண்டு மூன்று முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்புளித்து வர, வாயில் உண்டான புண்கள், தொண்டைப் புண், பல் வலி மற்றும் பல் ஆடுதல் போன்ற பாதிப்புகள் விலகி விடும். மேலும், பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் புழுத்தொல்லை பாதிப்பும் நீங்கிவிடும்.

3.அக்கரகார வேர்களை குழித்தைல முறைப்படி காய்ச்சி, தைலம் எடுத்து, அந்தத் தைலத்தை உடலில் தொடுதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் இடங்களில் தினசரி மெதுவாக தடவி வர, விரைவில் அந்த இடங்களில், தொடுதலின் உணர்வை உணர முடியும். உடல் தளர்வையும் போக்கும்.

4.அக்கிரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு மையாக அரைத்து, அதைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, உள் நாக்கில் தடவி வர, உள் நாக்கில் ஏற்பட்ட தொற்று வியாதி பாதிப்புகளால் ஏற்பட்ட புண்களால் தொண்டைக் கட்டி பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல், உடல் மன வேதனை அடைந்து வந்தவர்கள், அந்த பாதிப்புகள் யாவும் விரைவில் நீங்கி, அதன் பின்னர் நலமுடன் பேசவும், உணவு உண்ணவும் முடியும்.

5.திடீரென மயங்கி விழுந்து, பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வலுவாக உட்செலுத்த, உடனே மயக்கம் விலகி, பற்கள் கட்டிக் கொள்ளும் பாதிப்பு விலகி, சுய நினைவை அடைவர். காக்கா வலிப்பு வியாதியும் விலகும்.
மனிதர்களுக்கு நரம்புத் தளர்ச்சி பாதிப்பால் ஏற்படும் காக்கா வலிப்பு வியாதி, உடலுக்கு மிகவும் அதிக பாதிப்புகள் தருவதும், மனதுக்கு வேதனைகள் தருவதுமாக விளங்குகிறது. இந்த பாதிப்புகளைத் தடுக்க, அக்கரகாரத்துடன் துணை மருந்துகள் சேர்த்து செய்யும் சூரணம் ஒரு தீர்வாக அமையும்.

6.அக்கிரகாரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், சந்தனம், கிராம்பு, சுக்கு, திப்பிலி மற்றும் அபின் சேர்த்து, நன்கு இடித்து, தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து பத்திரப்படுத்தி, வைத்துக் கொண்டு, அந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று வியாதிகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகும்.

7அக்கிரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பொடியாக்கி, சிறிது எடுத்து பாலில் கலந்து, அதில், அரைத்து பாலில் வேகவைத்த பேரிச்சம் பழ விழுதைக் கலந்து, தேன் சேர்த்து, தனியே வைத்துக் கொள்ளவும். கடும் ஜுரம் மற்றும் குளிர் ஜுரம் உள்ள நேரங்களில், உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் உடலில் நீர்ச்சத்து இன்மையால், நாக்கில் ஏற்படும் வறட்சிக்கு, இந்தத் தேன் விழுதை சிறிதளவு நாக்கில் தடவ, நாவில் ஏற்பட்ட வறட்சி விலகி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், ஜுரத்தின் வேகமும் மட்டுப்படும்.

8.நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படக்கூடும், அதற்கு தீர்வாக, இந்த அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணமும் சேர்த்து, மேற்கண்ட முறையில் தயார் செய்து, பயன்படுத்த, நாவறட்சி பாதிப்புகள் நீங்கி, மலச்சிக்கலும் சரியாகி விடும்.
உடலின் இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளை, சரியாக இயங்கா விட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், உடலில் சோர்வு உண்டாகும், இது போன்ற நிலைகளில், பாதிப்பைக் களைந்து, மூளையின் ஆற்றல் சீராக, அக்கரகார வல்லாரை மருந்து உறுதுணை புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, மூளையின் செயல்பாட்டை சீராக்கும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படுத்தும். ஞாபக சக்தி மீண்டும் இயல்பாகும்.

8.உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கெட்ட செல்கள் வெளியேறி, உடலில் புதிய செல்கள் உருவாகும். இதன் மூலம், உடலின் வனப்பும் பொலிவும் அதிகரித்து, மனதில் உற்சாகம் தோன்றும், செய்யும் செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.

9.அக்கிரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர, குரலில் இனிமை கூடும்.

அக்கிரகார வேரைப் போலவே, அக்கிரகாரச் செடியின் தண்டின் பட்டையும் மருத்துவ குணங்கள் மிக்கதாகும்.

அக்கிரகாரப் பட்டையை சூரணம் செய்து, அதில் சிறிதளவு எடுத்து அரை லிட்டர் நீரில் கலந்து, சுண்டக் காய்ச்சி, மூன்றில் ஒரு பங்கு அளவில் வந்ததும், இறக்கி ஆற வைத்து, பருகி வர, அதிக தாகம், நாக்கு வறண்டு போவது, தலைவலி போன்ற பாதிப்புகள் விலகும்.
அக்கரகாரப் பட்டை சூரணத்தை தேனில் கலந்தும் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தும் தினமும் இரு வேளை சாப்பிட்டு வரலாம். மேற்கண்ட பாதிப்புகள் யாவும் சரியாகி விடும்.

(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/50297103_1472272569575389_9210310031990325248_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b4a7a1d15f8dde884a66ee143796a2d2&oe=5CBEB343)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 18, 2019, 11:04:11 PM
(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/50317396_1884097578379483_8266142071321001984_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=fa03330a9caea9b8c48687e9acd972f4&oe=5CC3D93B)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 19, 2019, 10:29:35 PM
அற்புத மருத்துவ குணங்களை கொண்ட புதினா...!

புதினா மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும்.
பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானம் ஆகும்.

புதினா இலையில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.

வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக் கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.

பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும்.

மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு, ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. மேலும் டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.


(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/45636860_566678157094350_8290529655836901376_n.png?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=fcb03df69d9cfc8fe0baab88acdbab38&oe=5CC9DF5B)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 19, 2019, 10:33:48 PM
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும். இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.webdunia.com%2F_media%2Fta%2Fimg%2Farticle%2F2018-03%2F30%2Ffull%2F1522387120-0929.jpg&hash=3c47a29123d8a846366352880e33068152a151dd)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 19, 2019, 10:52:50 PM
வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும். வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும். வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.

(https://2.bp.blogspot.com/-pUCAITAETBU/WpyVnofAoCI/AAAAAAAABP0/GH5EKUmHmzABqOqUlNuBCQW8O-9mG1YMgCLcBGAs/s1600/Neem-Powder.jpg)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 19, 2019, 10:56:59 PM
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். அகத்தி கீரை சுவையானது மட்டுமல்லாமல் பல சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட அகத்தியின் வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களும் பயனுடையது. அகத்திக் கீரை உடலிள்ள துர்நீரை வெளியேற்றும். பித்த நோயை நீக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.
அகத்திக்கீரை இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான உணவுகளில் முதன்மையானது.

அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள  இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் விலகும். சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த  வயிற்றி வலி தீரும். அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது

உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும். அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

(https://4.bp.blogspot.com/-B2BXnHZ7Ytw/WpNg_VJCUuI/AAAAAAAABKs/ywQwyVLEv2EQiTJQeXaBCuhB5vNRHLFzACLcBGAs/s1600/Sesbania%2Bgrandiflora.jpg)

Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 20, 2019, 11:44:04 AM
வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் வல்லாரை இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமமாக எடுத்து அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செய்து காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து  வகையான காய்ச்சலும் தீரும்.
கீழாநெல்லி, வல்லாரை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவந்தால் யானைக்கால் வீக்கம், குறையும்.

வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும்.

வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்துகொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக்கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு காலை  வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.

(https://i.ytimg.com/vi/PZB4qCBlyBY/maxresdefault.jpg)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 22, 2019, 12:16:19 PM
கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. 

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு  நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம்  இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

கண், முகம், வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில்  சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள்  பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும். இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெளியேறிவிடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.



(https://4.bp.blogspot.com/-s4FFdQXfLSA/WnuxBu9fQ5I/AAAAAAAABC0/k6MlWK0oDwQmTN8q2s_mBG7duoXc5anBQCLcBGAs/s1600/Kayantakarai%2B-TNAU%2Bagritech.tnau.ac.in%2Bhorticulture%2Bhorticulture_gallery%2Bmedicinal_crops.jpg)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 30, 2019, 07:46:25 PM
செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும்.

குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி  இறங்கும் என்பார்கள்.
 
தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து  அலச வேண்டும்.
 
கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால்,  பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
முடி வெடிப்புகளை தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து,  பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
 
கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி  உதிர்வது நின்று முடி பலம் பெறும்.
 
கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும்.  நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு  தருகின்றன.
 
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை  குறைவதை நீங்கள் காணலாம்.
 
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும்,  வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.


(https://2.bp.blogspot.com/-bmOOtqWHJmE/WiC3fprJuKI/AAAAAAAAApM/vIvlZRUWSy05hbdjmRU17mdpLD9u1nwnACLcBGAs/s1600/625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 30, 2019, 07:53:07 PM
அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்

அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும். ஆரம்ப நிலை மனநோயை குணப்படுத்தும்.

வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரைகளை சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.

அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

ஆங்கில மருந்துகளின் வேகத்தையும், பக்க விளைவுகளையும் முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

அரைக்கீரை சாறில் 1 கிராம் அரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.

இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.


(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/50428454_519909148503281_3825700698247397376_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=a3c37b2cac38684adb39796de54e2848&oe=5CB3A9A7)
Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 30, 2019, 08:16:58 PM
அன்பு நண்பர்களுக்கு இனியக்காலை வணக்கங்கள், இந்தநாள் இனியநாளாக அமையட்டும். தினம் ஓர் மூலிகை வரிசையில் இன்று நித்திய கல்யாணி. நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும்

 இதன் படத்தை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்த செடியை நிறைய இடங்களில் பார்த்தது நினைவில் வரும்

ஆனால் இதன் மகத்துவம் அறியாததால் இதனை பாதுகாக்க மறந்து விட்டோம். இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நித்ய கல்யாணி செடியை வணிக ரீதியாக பயிர் செய்கின்றனர். நித்ய கல்யாணி செடியின் அணைத்து பாகங்களும் நன்கு பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே தன்மையுடன் தளராமல் வளரக்கூடியது. நித்ய கல்யாணி பூத்து குலுங்க எந்த வித கட்டுப்படும் வைத்து கொள்வது இல்லை. ஆண்டின் அணைத்து மாதங்களிலும் பூத்து குலுங்கி மகிழ்ந்து கொண்டே உள்ளது.

நாம் ஊர்களில் சுடுகாடு, கல்லறை போன்ற இடங்களில் வளர்வதால் இதற்கு சுடுகாட்டு பூ, கல்லறை பூ என்ற பெயர்களும் உண்டு. கல்லறையில் வளர்ந்தால் என்ன காடுகளில் வளர்ந்தால் என்ன நித்ய கல்யாணி அவள் குணத்தை மாற்றிகொள்ளவதே இல்லை. நித்ய கல்யாணியின் மருத்துவ மகத்துவம் அறிந்து கொண்டால் இனி உங்கள் இல்லத்திலும் வாசம் செய்வாள்

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், சீரகம். 5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.

நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.

நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49435380_115166926208785_74342795812274176_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=b9c6e2865ccc7091c128aa2527b6998b&oe=5CFFD4AD)

Title: Re: மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
Post by: Evil on January 30, 2019, 08:29:52 PM
*தினம் ஒரு மூலிகை*

இன்று... கண்டங்கத்திரி மூலிகைச் செடியின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்...

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்...

பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். கண்டங்கத்திரி பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் கோழையகற்றும் பண்பிற்காக சேர்க்கப்படுகின்றது...

கண்டங்கத்திரி செடி முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக, பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில் காணப்படும். கண்டங்கத்திரி இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை...

கண்டங்கத்திரி பூக்கள் நீலநிறமானவை, 2 செ.மீ. நீளத்தில் சிறு கொத்துகளில் காணப்படும். கண்டங்கத்திரி செடியில் சிறு கத்தரிக்காய் வடிவமான காய்களும், மஞ்சள் நிறமான பழங்களும் உள்ளன...

கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை...

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்...

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.
கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது...

கறிமுள்ளி...

கறிமுள்ளி தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் நீலநிறமான பூக்களையும் வெள்ளை வரியுடைய உருண்டையான காய்களையும் மஞ்சள் நிறப் பழங்களையும் உடையது. பாப்பாரமுள்ளி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு...

கறிமுள்ளி தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது. கறிமுள்ளி இலை, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இவை கோழையகற்றும்; சிறுநீர் மற்றும் வியர்வையை அதிகமாக்கும்...

கறிமுள்ளி இலைச்சாறு 3 தேக்கரண்டி, சிறிதளவு தேன்கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம், 3 நாட்கள் குடிக்க சளி குணமாகும்...

கறிமுள்ளி செடியை நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொண்டு, சம அளவு கற்கண்டுத் தூள் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதில், ½ தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்...!


(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49592325_2212080179039755_7357835004514140160_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=ec41581ff29b8bc95b8000fba77ebc04&oe=5CBECFC7)