FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on January 12, 2019, 08:21:20 AM
-
சளி தொல்லை நீங்க வீட்டு வைதியம் :
1. துளசிச்சாற்றை வெறும் வயிற்றில் கொடுக்க சளித்தொல்லை குறையும்.
2. கற்பூரவல்லி இலையையும் சீரகத்தையும் கொதிக்கவைத்து குடிக்க நெஞ்சுச் சளி கரையும்.
3. ஓமம், பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் போட்டு காய்ச்சி காலை மாலை குடிக்க சளி குறையும்.
4. மிளகை ஊசியில் குத்தி தீயில் காண்பித்து அந்தப் புகையைப்பிடிக்க மூக்கடைப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
5. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது மஞ்சள் தூளையும் யூகாலிப்ஸ் தைலம் சில துளிகளையும் விட்டு ஆவி பிடிக்க நெஞ்சு சளி குறையும். nebulizer வைத்த பலன் கிடைக்கும்.
6. வேப்ப இலையை சிறிது எடுத்து அரைத்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் பூச்சி தொல்லை நீங்கும்.
7. வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட சளி குறையும்.
8. கறிவேப்பிலையை தினமும் காலை சாப்பிட்டு வர நோய்எதிர்ப்பு சக்தி கூடும்.
9. கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லிவிதை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து கசாயம் வைத்துக் குடித்தால் வரட்டு இருமல் குறையும்.