FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on January 12, 2019, 08:08:36 AM

Title: அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட அருகம்புல் சாறு...!
Post by: Evil on January 12, 2019, 08:08:36 AM
அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட அருகம்புல் சாறு...!

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிரது.

சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும்.

வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்கும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. உடல் இளைக்க உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும். பல், ஈறு கோளாறுகள் நீங்கும். மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49815833_314230655880646_3903311049343893504_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=528f78a4fef075dc7a22e40cabaf0a5d&oe=5CB7E948)