FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on January 12, 2019, 07:59:57 AM
-
தோல் நோயை போக்கும் செம்பருத்தி ஆயுர்வேதிக் தைலம் செய்முறையும்:
1.செம்பருத்தி இலை - 200 கிராம்
2.கீழாநெல்லி - 200 கிராம்
3.வில்வ இலை - 200 கிராம்
4.விருட்சிப்பூ - 200 கிராம்
5.அருகம்புல் - 200 கிராம்
6.வெற்றிலை - 200 கிராம்
7.துளசி இலை - 200 கிராம்
8.ஜாதிமல்லி இலை - 200 கிராம்
9.அவுரி இலை - 200 கிராம்
இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் 800 கிராம், தேங்காய்ப் பால் 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த
10. அதிமதுரம் - 33 கிராம்
11. சீரகம் - ஜீரக - 33 கிராம்
12. கருஞ்சீரகம் - 33 கிராம்
ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.
பயன்படுத்தும் முறை:
மேற்பூச்சாக வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள் :
1.சிரங்கு.
2.அரிப்பு.
3. கரப்பான்.
போன்ற தோல் நோய்கள் முக்கியமாக
குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு இதனைப் பயன்படுத்துவதுண்டு.
*குறிப்பு :
தெரிந்து கொள்ள வேண்டியவை
1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த
முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் * வெட்பாலை தைலம் * இந்த
தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்.
(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/49330435_1465664056902907_7448306338825764864_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=2fa2a97eddcf4f3f4923dcdc4f82bac2&oe=5CC4C84A)