FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 29, 2012, 01:01:51 PM

Title: கவிதையே
Post by: Dharshini on March 29, 2012, 01:01:51 PM
கவிதையே
உன்னை  நேசிக்க  கோடிக்கணக்கான  ரசிகர்  இருக்க
நானும்  ஒரு  ரசிகையாய்
ஒரு  ஓரத்தில்  நின்று  ரசிக்கிறேன் உன்னை
உன்  எண்ணாத்தில் இருந்து  புறப்படும்
வார்த்தையாக  நான் மாற
வழி  தேடி  அலைகிறேன்
உலகில்  பலர்  உன்னை (கவிதை ) எழுதியே  காதலை  தெரிவிக்கிறார்கள்
நானோ  உன்னை  காதலிக்கிறேன்
கவிதையே  உன்னால்
மயங்கியவள்  நான்
உன்  மேல்  மையல்  கொண்டவள்  நான் 
அச்சம்  மடம் ஞானம்  பயிர்ப்பு
பெண்ணுக்கே  உரிதனவையம்
இதை   துளி  கூட  அறியாதவள்  நான்
உன்னாலே  இன்று அறிந்தேன்
உன்னுள்  வளர்ந்து  வரும்
சிறு  புள்ளி  நான்
கவிதையே  என்னை  நேசிப்பாயா?