FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on January 09, 2019, 09:38:05 AM
-
எளிய மருத்துவக் #குறிப்புகள்..
* அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
* சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.
* தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.
* வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.
* கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49948467_340523953469504_2090241144217665536_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=de3e3c38a9e56a9492083f7a688ee5c7&oe=5CD35B4E)
-
#உடல் #ஆரோக்கியத்தை #சீராக #பராமரிப்பதில் #பழங்கள், #காய்கறிகளுக்கு #முக்கிய #பங்கு #இருக்கிறது.
எனினும் ஒருசில வகை காய்கறி, பழ வகைகளில் சர்க்கரை அளவும், ஸ்டார்ச் அளவும் அதிகம் இருக்கின்றன. அதனால் நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமின்றி தமக்கும் அத்தகைய பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பேர் காய்கறி, பழ வகைகளை சாப்பிட தயங்குகிறார்கள். சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
* தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.
* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.
* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.
* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.
* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.
-
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/50265697_2128941193811442_4117486628715364352_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=d5920aba89ca29b35bbb61c563702a10&oe=5CD10B7B)
-
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49735050_2055300138093290_2583727191401431040_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=165bd73bd2d19df15f6ba69422192d7b&oe=5CCA5A35)
-
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49899989_2055292361427401_8313831408195862528_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=319bd3c16bff8c42b0052229081fe58e&oe=5CCD54D0)
-
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/50309640_2055292054760765_5565743867145224192_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=5d1840a801d85510169dc353c6f32464&oe=5CC3A415)
-
(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/50064320_2055299544760016_2963434624291700736_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=9a4aba51bc1f139f8673f26416cf6e93&oe=5CC4DBAE)
-
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/50263476_344674129721153_1074227717945163776_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=7e7c1e0f0648b793fdcaede6fced75d4&oe=5CD1DFE2)