FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on January 09, 2019, 06:26:30 AM
-
கல்லறை கல்வெட்டுகளில் நீ ...
வாசகமாகி போனதால்..
இன்று கண்ணீர்க்கும்...
யாசகம்கேட்டு நிற்கின்றேன்!
வாழ்க்கையை வரமாக்கி ...
காதலை உரமாக்கி.....
இன்பத்தை பரிசாக்கி...
இருளோடு கலந்து விட்டாய்!
உன் நியாபக சுரங்கத்தில் ...
புதையலை தேடி அலைகிறேன்!
கிடைத்தது என்னவோ ...
வெறுமையின் நிழல்களைத்தான்!
கால வெளியில்...தனிமை துகளாய்....
ஜீவன் சுமந்து திரிகிறேன்!
உன் முக சாயலில் ..ஒருவரை கண்டாலும் ..
நின்று விடுகிறேன் நினைவு தூணாய்!
அன்று மூச்சை நிறுத்தி ...
மரணத்தை தேடி நீ !
இன்று ரணங்களில் உழன்று ..
நிம்மதி தேடு ஆவியாய் நான் !
என் உயிர் காற்று வாங்கி ..
சொர்க்கத்திற்கு சென்றுவிட்டாய் !
இவ்வுலகில் ..
நடைபிணமாய் நரக வாழ்க்கை ..
வாழ்ந்துவிட்டு வருகிறேன்! போ!
-
Rishu Babe enathan nija vazhalkaila avanga namala vidu romba dhoorAm iruthalum namaa nenavila eppaiyum kodave irupanga kavala paata venam babe :-* :-*naanga elllam irukkam :-*
-
அழகான கவிதை தோழி... வாழ்த்துக்கள். :)
தேர்ந்தெடுத்த வரிகள், வரிகளில் வலிகளை உணரமுடிகிறது.
நெருங்கியவர்கள் மரணத்திற்குப்பின் மனம் ஊனம் ஆனதுபோல்தான் மாறிவிடுகிறது, நீங்கள் கவிதையில் கூறியதுபோல் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு...
-
உன் அன்புக்கு நன்றி :-* டோரா பேபி !நன்றி மாறன் தோழரே! :)
-
ஆதங்கங்களையும்
தவிப்புக்களையும்
குழப்பங்களையும் தாண்டி
சிரித்தே கடக்க வேண்டியிருக்கிறது
அன்பின் பேரிழப்புகளை...
-
நினைவுகளே சுமை தானே பேபி :(