FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on January 06, 2019, 07:54:18 PM
-
சொல்லும் தூரங்களிலே
நீ தொடர்ந்தும்
சொல்லாமலே தொடர்ந்ததில்
தொடர்ந்து நீண்டிருந்தது
நமக்கான காதல்
அடி அடியாய் அளந்து வைத்து
அகன்றிடாமல் நடந்தே
நீ தொடர்ந்திருந்தும்
முன் யாரோ வந்தததாகவும்
பின் யாரோ தொடர்வதாகவும்
செல்லாக் காரணங்கள் சொல்லியே
நான் தள்ளிப்போனதில்
விரக்திசேர்ந்து சோர்ந்து
நீயல்லாத நீயாய் மாறி
சுயம் அழிக்கும் சாபமும்
தாங்கி நிற்கிறாய்
உன் புன்னகைகளை கொன்ற பெரும்பாதகனை
புன்னகை கொண்டே
எதிர்கொள்ளும் உன்னை
என்ன முகம் கொண்டு நான் எதிர்க்கொள்வதாம்??.