FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 31, 2018, 03:35:29 PM

Title: இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: Guest on December 31, 2018, 03:35:29 PM
கூடாதுகள் பட்டியலில்
எனது பெயரும்
இருக்கக்கடவது...
.
நம்மாேடே பயணிக்கும்
அனு தினங்களும்
அழகாய் இருக்கக்கடவது...
.
சம காலத்தை என்னாேடே
பயணிக்கையில்
அன்பாய் இருக்கக்கடவது...
.
வாழ்த்துங்கள் உங்கள்
இதய மாெழியில் - ஆனால்
அதையே வணங்குவதாய்
கற்பனை செய்யாதீர்கள்....
.
என் சுவரில்
நாேட்டீஸ் ஒட்டாதீர் என
நாேட்டீஸ் ஒட்ட விரும்பவில்லை

வெளிச்சுவர்களை சுண்ணாம்பு பூசியவர்கள்
உட்சுவர்களை அப்படியே
விட்டுவைத்ததேனாே...
.

என்னாேடே பயணிக்கிறது காலம்
இல்லை இல்லை
காலத்தாேடே பயணிக்கிறேன் நான்
எல்லாவரிலும் நன்மை காண
இன் நாள் மட்டும் பாேதாது...
.
எல்லாேருக்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....
Title: Re: இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: Guest 2k on December 31, 2018, 07:00:39 PM
முக்கியமாக அறைக் கதவுகளை பூட்டி வைத்துக் கொள்ளாதீர்கள்.வண்ணம் தீட்டுவதற்கு ஏதுவாய் திறந்து வைத்திருங்கள். இதையும் மற்றுமொரு நோட்டீஸ் என எடுத்துக்கொள்ளாதீர்கள் :) மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா
Title: Re: இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: Guest on December 31, 2018, 09:46:34 PM
அறை முழுவதும் யாரும் எதிர்பார்க்காத வண்ணங்களால் நிரம்பி வழிகிறது... வருகின்றவர் வண்ணங்களை கலைக்காமல் இருக்க கண்ணாடி அறை கதவுகள் பூட்டியே இருக்கட்டும்.........

மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்....சிக்கு
Title: Re: இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: சாக்ரடீஸ் on January 01, 2019, 12:16:15 AM
happie new year dokku machi lochak  :-* pachakkkk :-* mochakkk :-*
Title: Re: இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post by: DoRa on January 01, 2019, 12:19:50 AM
Happy New Year dokku