FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on December 31, 2018, 02:15:11 PM
-
உடலில் #சேரும் #கெட்டக் #கொழுப்பை #கரைக்க #இதைச் #சாப்பிடுங்க!
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பல வழிகள் உள்ளது. ஆனால் எவ்வித பக்கவிளைவுகளும் வராமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க சிறந்த உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
#பூண்டு
பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.
#ஆப்பிள்
நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.
#சோற்றுக் #கற்றாழை
தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன் கொழுப்பும் குறையும்.
#கொள்ளு
கொள்ளுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
#கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்
#மிளகு
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
#சீரகம்
தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.
#இஞ்சி
இஞ்சியின் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/49569699_333966764125223_1943633320331968512_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=47f4e0739aeee300755925df8d434286&oe=5C957AF4)