FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 24, 2018, 06:44:07 PM

Title: உயிர் நீ(ர்)
Post by: Guest on December 24, 2018, 06:44:07 PM
புரையேறிய ஒரு நொடிக்கு பின்
மீண்டும் பருகும்
முதல்மிடறு நீராகிறாய்...
 
உச்சந்தலை அழுத்தி கடுமை தணிக்கும்
சிறு இடையூறு நிமித்தமாய்   
வெறுத்திட இயலா
(உயிர்)நீர் நீ.

என் தாகங்கள் தணித்திடும்
தீராத தேவையாகவே தொடர்ந்திடு..