FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on December 23, 2018, 11:26:49 PM
-
ஓவியம் தீட்ட தூரிகை எடுத்தேன் !
மனம் எதையோ சிந்திக்க .....
கை ஏதோ வண்ணம் தொட்டு..
தூரிகையை குழப்ப ....
எண்ண சிதறல்களை.....
விரல்கள் உதற......
குழையும் வண்ணங்களில் ....
தெரிந்தது ஒரு முகம்!
எங்கோ பார்த்த நியாபகம்!
நிறங்களின் தெளிப்பில் ....
தெளிவில்லா என் அகம்!
ஊதா நிறத்தில் ஒளிர்ந்த முகம்....
ஆழ்ந்த நீலத்தில்......அமிழ்ந்து ....
இளம் நீலத்தில் தோய்ந்து ....
பசுமையை சாரம் கொண்டு...
மஞ்சளில் குளித்து...
ஆரஞ்சு வனத்தில்....அழகாக்கி
சிகப்பு வண்ணத்தில்....
சிதறியது எண்ணங்களாய் !
நிறங்கள் அழைத்து சென்றன !
வேரோரு உலகிற்க்கு....
கண்களில் சுவர்க்கம் தெரிய ....
கனவுலகில் சஞ்சாரம் .....
தேவனுடன் பூந்தேரில்....
நேசமும் பாசமும் ....
காதலும் களி ஆட்டமுமாய் !
அன்பில் மூழ்கி அளவில்லா ..
ஆனந்தம் பொங்க......
வானுலகிற்கு வண்ணங்கள் ...
பூக்களை வாரி இறைக்க...
பறந்து கொண்டே இருக்கிறன்றன !
திடுக்கிட்டு இவுலகு வந்தேன் !
கையில் பிடித்த தூரிகை ....
எதிரே இருந்த ஓவியம்...
யாவும் கருப்பு வெள்ளையாய்!
நிகழ் காலத்தை உணர்த்தின!
கருப்பு வெள்ளைக்கு
வாழ்க்கை பட்டுவிட்டு........
வண்ணங்களால் பின்னப்பட்ட ...
ஒரு ஓவியத்திற்கு ஆசைப்பட்டால் முடியுமா ?
-
nice kavithai rishu baby :-*
-
ரிஷி மா, அருமையான கவிதை.உன் உள்ளதை போலவே வண்ணங்களாக ...கருப்பு வெள்ளை வண்ணங்களின் ஆதாரம் ... தூரிகை பிடிக்கும் உனது கைகள் என்றுமே வண்ணமயமானது ..உன் வாழ்வு கூட ... உன் ஓவியங்களை வண்ண மயமாக்கு உன் புன்னகை எனும் தூரிகை கொண்டு :)
-
அழகான கவிதை ரிஷூ பேபி.எங்க அண்ணி சொன்னது போல கருப்பு வெள்ளை தானே மற்ற வண்ணங்களுக்கு ஆதாரம்.சில சமயங்களில் கருப்பு வெள்ளை கூட பேரழகு தான். கருப்பு வெள்ளை கொண்டே புதியதொரு வண்ணத்தை உருவாக்கிடுங்கள் ரிஷு பேபி :-*
-
கருப்பும் ,வெள்ளையும்
ஒரு வண்ணம் தானே
இருந்தும் பிற வண்ணங்களின்பால்
ஈர்ப்பு நமக்கு
தூரிகைப்பிடிக்கும் உங்களுக்கு தெரியாததல்ல
உள்மனதின் பிரதிபலிப்பு தான் கனவு
உங்கள் உள்மனது சொல்வது போல்
வண்ணங்களால் நிறைந்த வாழ்க்கை
உங்களுக்காய் காத்திருக்கிறது
தயாராய் இருங்கள்
-
அன்பு தோழிகளே ! டோரா! ஜஷா! சிக்க்கு!
மற்றும் ஜோக்கர் அவர்களே !
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி !
நான் கருப்பு வெள்ளையை வெறுக்க வில்லை :)
வண்ணங்களின் காதலி நான் !
எந்த நிறமும் மனதில் நிற்கும் !
நீங்கள் சொன்னது போல...
புன்னகையின் வண்ணத்தால்....
என் வாழ்க்கையை நிரப்புகிறேன் !
நன்றி மீண்டும் ! அன்புடன் ரிஷிகா !
-
அருமை.....
கருப்பு வெள்ளைக்கு வாக்கபடாமல்
இங்கு - பார்வை ஏது?
பார்க்கும் யாவும் வண்ணமையமே....
-
மிக்க நன்றி நண்பரே டொக்கு !
கருப்பு வெள்ளையில் அத்தனை
வண்ணங்களும் அடக்கமே !
அதனால் ! வாழ்கை வண்ணமயமே :)
-
arumai