கடற்க்கரை ஓரம் ஈரமணலில் அலைகளால்
என் கால்கள் நனைக்க நின்றேன் .....
அலைகள் எழுப்பும் ஒலிகள் உன் காதலை கூறு என்பது போல் எனக்கு தோன்றியது....
நீர் குமிழியாக ஆசைகள் பொங்க என்னை மீறி நான்
உன் பெயரை உரக்க கத்தினேன்....
என்ன ஆச்சரியம் வரும் அலைகளில் ஒவ்வொன்றும்
உன் பெயரை கூறி என் காலடியில் முத்துகளை இட்டு சென்றன.....
கால்கள் மட்டுமா நனைத்தன அலைகள் ....உடலையும்தான்...
கடலிடம் காதலை கூறும் நான் காதலியிடம் காதலை கூற தயங்குவது ஏன்?
சிப்பிக்குள் முத்து ஒளிந்து கிடப்பது போல ...
உனக்கான என் காதலும் சொல்லாமலே ஒளிந்து கிடக்கின்றன....
என்று அவை வெளிப்படும் என்ற ஆவலுடன் நான்...
:( :( :'( :'( Jawa :'( :'( :( :(