FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on December 22, 2018, 06:44:36 PM

Title: ஆரோக்கிய_தகவல்கள்
Post by: Evil on December 22, 2018, 06:44:36 PM

!ஒரே ஒரு அதிசய பல நோய்களுக்கு தீர்வு !

!!!ஆரோக்கிய_தகவல்கள்!!!
நமது உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை தீண்டாது. அசுத்த ரத்தத்தால் நமது உடல ரிப்பேர் செய்ய இயலாமல் திணறும். கழிவுகள் சேரும், கொழுப்புகள் கூட சேர்ந்து இதய நோய்கள், ரத்த அழுத்தம், பக்க வாதம் , என பல அபாயமான நோய்களுக்கு அடித்தளமாக அமைந்து விடும்.

நாம் சரியான உணவு, உடற்ப்யிற்சி போன்ரவற்றை செய்கிறோமா என சோதித்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தங்கும் அன்றாடக் கழிவுகளை உடலானது 90 சதவீதம்தான் வெளியேற்றுகிறது. மீதமுள்ள நச்சு, கழிவுகள், கொழுப்பு போன்றவை உடலிலேயே தங்கி கேடு விளைவிக்கிறது. அதனை வீட்டிலிருந்தபடியே ஒரே ஒரு மருந்தால் வெளியேற்ற முடியும். அது என்ன என்று பார்க்கலாமா?

#தேவையானவை :

#வெந்தயம். - 250gm

#ஓமம் - 100gm

#கருஞ்சீரகம் - 50gm

#செய்முறை :மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

#சாப்பிடும்_முறை :இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

#நன்மைகள்: தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

#கொழுப்பு : தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

#சீரான_ரத்தம் :இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. கண் பார்வை தெளிவடைகிறது...ஷ...ரு🌳

#அழகு : சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

#பல்_எலும்புகள் :எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

#உடல்_பலம் :இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/48360457_1165771763572103_4599446663008878592_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=43bb990b5a7ffd50ee5e6dd341192ae4&oe=5CA37B79)