FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 21, 2018, 05:22:46 PM

Title: வருவாளா அவள் வருவாளா
Post by: thamilan on December 21, 2018, 05:22:46 PM
எங்கள் காதல் விசித்திரக் காதல்
காதலில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன
எங்கள் காதலோ விநோதக் காதல்
தண்ணீர் கலக்காத பால் போலே
காமம் கலக்காத காதல் எங்கள் காதல்

இது வரை கண்டதில்லை
நான் கறுப்போ அவள் சிவப்போ
இதுவரை அறிந்ததில்லை
அவள் சிரித்தும்  நான் பார்த்ததில்லை
நான் அழுதும்அவள்  கேட்டதில்லை

முகம் பாராது முகவரி கேளாது
முன்பின் அறியாது வெறும் நட்பில்
மலர்ந்ததெங்கள் காதல்
நாம் பார்க்காவிட்டாலும் மல்லிகைப்பூ
மலர்ந்தால் மணம்வீசுமே
காற்றோடு நம்மையும் தழுவிச் செல்லுமே
அப்படி என்னை தழுவியது
அந்தக் காதல்

அவள் குரல் அழகாய் இருக்கும்
அவள் பேச்சு அளவோடு இருக்கும்
நான் ஐந்து வரிகளில் பேசினால்
ஐந்து எழுத்தில் பதில் வரும்
பணத்தில் எப்படியோ தெரியாது
பேச்சில் ரொம்ப சிக்கனம் 

எப்படித்தான் புகுந்தாளோ
என் மனதில் நான் அறியேன் பராபரனே
அருகில் தான் இருக்கிறாள்
எதோ ஒன்று குறுக்கிடுகிறது
அவளை பார்க்கலாம்
என்று எண்ணும் போதெல்லாம்

எப்படியோ ஒரு நாள்
எனது காதலை  நான் சொன்னேன்   
அவள் காதலை  அவளும்  சொன்னாள்
காதலை சொன்னவள்
காணாமல் போய் விட்டாள்

காரணம் தெரியவில்லை
நாணம் காரணமா இல்லை
நான் தான் காரணமா
தெரியவில்லை எனக்கு
காத்திருக்கிறேன் அவளுக்காக
வருவாளா அவள் வருவாளா 
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: joker on December 21, 2018, 06:48:16 PM
அருமையான கவிதை சகோ

யார் காரணமோ?
நானறியேன்
ஆனால்
இந்த கவிதை கிடைக்க காரனமானவள்
வருவாள்

காத்திருங்கள்
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: Guest 2k on December 21, 2018, 09:22:35 PM
அருமை தமிழ்ண்ணா. நெஞ்சம் உடைந்து போய்விடவில்லை தானே?  பத்திரமா வச்சிக்கோங்க அவங்க திரும்ப வரும்போது கொடுக்கனும்ல :)
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: யாழிசை on December 22, 2018, 12:53:44 PM
ஹா ஹா ஹா ... தமிழா ...

காத்திருப்பதும் காதலில் காண்பதற்கரிய பேரின்பமே ...
காத்திருங்கள் ... காலம் கனியும்....  ;) ;) ;)
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: Evil on December 22, 2018, 03:00:57 PM
காதலில் காத்து இருப்பது கூட கடவுள் கொடுத்த வரம் தான் வரம் கொடுத்த கடவுளே வரவைப்பார் எண்ணி வருகைக்காக காத்திருங்கள் !!!  வருவாள் உங்களின் அன்பை பெறுவாள்  ;)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Frs294.pbsrc.com%2Falbums%2Fmm87%2FPamelia_and_Stormi_SongBird%2Fglobes%2Froseheartbutterflyglobe.gif%7Ec200&hash=3177b1eda8242df93f6016a077a454886a0ed58f)
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: NiYa on December 28, 2018, 09:23:11 AM
காதல் கிடைத்து விட்டால் அது எப்போவாவது நினைச்சு பார்கும் சந்தோஷம்
கிடைக்கா விட்டால் அது எப்போதும் நினைச்சு கொண்டிருக்கும் வலி சுகமான வலி
Title: Re: வருவாளா அவள் வருவாளா
Post by: thamilan on December 29, 2018, 06:24:47 AM
காதல் கிடைத்து விட்டால் அது எப்போவாவது நினைச்சு பார்கும் சந்தோஷம்
கிடைக்கா விட்டால் அது எப்போதும் நினைச்சு கொண்டிருக்கும் வலி சுகமான வலி

இது புதுசா  இருக்கே .
kathal கிடைக்க விட்டால் அந்த காதலை எப்போதாவது நினைப்பது தான் வழக்கம் . கிடைச்ச காதலை எப்போதும் நினைத்து சந்தோசப் படுவது தானே வழக்கம், இவங்க புதுசா எதோ சொல்லுறாங்களே. கிடைச்ச காதலை எப்போதாவது நினைத்து சந்தோசப்பட்டா அந்தக் காதல் உருப்பட்டப்போல தான், நாம வருசத்துக்கு  ஒருக்கா காதலை நினைக்கிறவரை  காதலனோ காதலியோ இருக்க மாட்டாங்க . ஓடிடுவாங்க பாவம் உங்களுக்கு வரபோற காதலன் நியா