இந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு உயிருக்கே உலையாக வந்து விடும். நுரையீரலில் ஏற்பட கூடிய தொற்றுக்களை தடுத்து விட்டாலே நெஞ்சு வலி, நெஞ்சில் ஏற்பட கூடிய தொற்றுகள் போன்ற அனைத்திலும் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.
(https://i.postimg.cc/bwpYN9Xp/chestinfectiin-homeremedies-1545378857.jpg) (https://postimages.org/)
இந்த தொற்றுக்களை உருவாக்க மூல காரணமே சளி தான். இதனால் பலருக்கு மூச்சு திணறல், தொண்டையில் தொற்றுகள் பரவுதல், நெஞ்சு இறுகுதல் போன்ற பலவித அபாயங்கள் உண்டாகும். இவற்றை ஒரே ராத்திரியில் குணப்படுத்த . வாங்க, ஒவ்வொரு எளிய முறையையும் தெளிவாக தெரிஞ்சிப்போம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2469%2F2469112qiwnhomcbf.gif&hash=f04e67dff6bf1b01301c9a57c44a19b006ca5a18) (http://www.glitter-graphics.com)
(https://i.postimg.cc/rySZSvZG/1-1545378900.jpg) (https://postimages.org/)
நெஞ்சு தொற்றுக்களை விரட்ட
உங்களின் நெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க இந்த 3 கலவையே போதும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் சட்டென வெளியேறி விடும்.
தேவையானவை...
தேன் 1 ஸ்பூன்
பூண்டு 2 பல்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் பூண்டை நசுக்கி பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் விலகி, சுகமாக சுவாசிக்கலாம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2469%2F2469112qiwnhomcbf.gif&hash=f04e67dff6bf1b01301c9a57c44a19b006ca5a18) (http://www.glitter-graphics.com)
மூலிகை டீ
(https://i.postimg.cc/ZRQ6yPXD/6-1545378938.jpg) (https://postimages.org/)
பலவித மருத்துவ குணங்கள் இந்த மூலிகை டீயில் நிறைந்துள்ளதாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வெளியேறி விடும்.
தேவையானவை
வெந்தயம் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
தண்ணீர் 1 கப்
செய்முறை
வெந்தயத்தை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2469%2F2469112qiwnhomcbf.gif&hash=f04e67dff6bf1b01301c9a57c44a19b006ca5a18) (https://postimages.org/de/)
ஆற்றல் மிக்க வைத்தியம்
இந்த மூன்று பொருளும் ஒவ்வொவரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. இதனை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் ஆற்றல் உடல் முழுக்க செயல்படும்.
தேவையானவை
வெங்காயம் சின்னது 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேன் அரை ஸ்பூன்
(https://i.postimg.cc/T31jTqQS/8-1545378954.jpg) (https://postimages.org/)
செய்முறை
வெங்காயத்தை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2469%2F2469112qiwnhomcbf.gif&hash=f04e67dff6bf1b01301c9a57c44a19b006ca5a18) (https://postimages.org/de/)
இஞ்சி வைத்தியம்
பொதுவாக் இஞ்சி பலவித நோய்களை குணப்படுத்த கூடியது. அதே போன்று இந்த நெஞ்சில் உள்ள தொற்றுகளையும் வெளியேற்ற கூடும்.
இதற்கு தேவையனாவை
இஞ்சி 1 துண்டு
கொதிக்க வைத்த நீர் 1 கப்
தேன் 1 ஸ்பூன்
(https://i.postimg.cc/0QcvpwKT/9-1545378963.jpg) (https://postimages.org/)
செய்முறை
இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி கொண்டு, அதனை நீரில் 5 நிமிடம் கொதிக்க விடவும். அதன்பின் இத்தனை வடிகட்டி கொண்டு, தேன் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl6.glitter-graphics.net%2Fpub%2F742%2F742476yk8r1mon6x.gif&hash=6a4e10eff9d7546dda508a3828ca603680d33f1a) (https://postimages.org/de/)