FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 21, 2018, 02:39:57 PM

Title: சுவாரசிய நிமிடங்கள்!
Post by: joker on December 21, 2018, 02:39:57 PM
சுவாரசிய நிமிடங்கள்
ஒவ்வொரு நாளிலும்
கொஞ்சம் இனிமையான
நிமிடத்தை சேமித்து வையுங்கள்

உடல்நலமில்லா வேளையில்
உண்ணும் கஷாயத்தில் கூட
மதுரம் சேர்ப்பது போல்

உங்கள் கஷ்டங்களுக்கு இடையில்
புன்னகைக்கு சிறு இடம் ஒதுக்குங்கள்

யாருமில்ல வேளையில்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து யோசிக்கையில்
தேனீர் இல்லா கோப்பை
என்ன சுவாரசியத்தை
தந்துவிட போகிறது ?

பிரிந்து போன காதலோ
கடந்து போன நட்போ
முறிந்து போன உறவோ
அசைபோடுகையில்
அந்நேரம் தூவிவிட்ட
இனிமை நினைவுகள்
தரக்கூடும்
உங்களுக்கு

சிறந்ததொரு
சுவாரசிய நிமிடங்கள்

Title: Re: சுவாரசிய நிமிடங்கள்!
Post by: NiYa on December 21, 2018, 03:29:45 PM
பிரிந்து போன காதலோ
கடந்து போன நட்போ
முறிந்து போன உறவோ
அசைபோடுகையில்
அந்நேரம் தூவிவிட்ட
இனிமை நினைவுகள்
தரக்கூடும்
உங்களுக்கு

உண்மையான வரிகள்
நண்பா
சுகமான ஆனால் கொஞ்சம்
சுமையான நினைவுகள் கூட