FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 21, 2018, 11:49:22 AM
-
தூரப்பயணம் ஒன்றில்
பேருந்துக்கு முன்னதாகவே வந்து
ஆரத்தழுவிக்கொள்ள காத்து நிற்கிறது உன் பேரன்பு....
குளிருக்கு போர்த்திக்கொள்ள
மடித்து வைத்திருக்கும் உன் கைகளையேனும் கொடு...
பனிபொழியும் தினமொன்றில்
அதிகாலை குளிர்போலே
உயிர் நரம்புகளில்
அன்பால் ஊடுருவிக்கொள்கிறாய்..
இடம் வலம் என
உன் நினைவுகளால்
சூழ்ந்திருக்கும் இந்த இரவில்
தனித்திருக்கிறேன் என்பது பொய்யாகக்கூடும்...
கன்னத்தின் ஈரத்தில்
நிலைக்கொள்கிறது காதல்..
பல நேரங்களில் கண்ணீராய்
சில நேரங்களில் முத்தங்களாய்..
என்னைவிட
என் கவிதைகளுக்கு
உன்னை நன்றாக தெரியும் என்கிறாய்...
தலை கால் புரியாமல் பெருமிதம் கொண்டலைகிறது
என் கவிதை......
இறுதியாய்
உன்னை நினைத்தாலே
உள்ளார உல்லால.....😎
-
உல்லால பைத்தியம் ;D :D ;D
-
@ saami .. 😂😂😂😂 உல்லால part2 உனகாகவே போடுரேன் ... படிச்சு மண்டைய பிச்சுக்க.....😡😡😡
-
உல்லாலா எனும் பேரன்பு 😁
-
Chikku நான் கூட சம்யுக்தா என்னதான் சொல்லிச்சுன்னு நினைசேன்.....😂😂😂😂😂
-
😂😂 உங்க கவிதைல ஏன் என்னை சொல்ல போறாங்க
-
Chiku 😂😂😂 அப்போ சொல்லேலனாலும் ஓத்துக்குறீங்க right ......
-
நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க எனக்கு ஒண்ணும் புரிலயே :o :o இதுக்கு தான் இந்த தமிழ் புலவர்கள் கிட்ட இருந்து two steps backla தள்ளியே இருக்கனும் போல ;D ;D
-
@ saamiiii துடங்கிவிடுவதும் இறுதியில் முடிப்பதும் யாரோ பண்ணுற வேலை 🤔 யாருந்னு நியாபகம் வரமாண்டேங்குது........
# நாராயணா - கொசு - தொல்லை..